சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

மாலை மலர்

சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. மக்களிடம் இந்த வீடியோ பெரும் அளவு வரவேற்பை பெற்றது. இதுவரை யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Between rage and redemption, stands one man ?#Madharasi / #DilMadharasi IN CINEMAS WORLDWIDE SEPTEMBER 5th ❤?#MadharasiFromSep5#SK23@SriLakshmiMovie @Siva_Kartikeyan @anirudhofficial @VidyutJammwal #BijuMenon @rukminitweets @actorshabeer @vikranth_offl @SudeepElamon pic.twitter.com/ckK3DWn9D8