சினிமா செய்திகள்

ரஜினி நடித்த கூலி படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.

மாலை மலர்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். 

கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும், படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், கூலி படம் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்டு 14-ந் தேதி திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.