சினிமா செய்திகள்

மாண்புமிகு பறை படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ வெளியீடு

அறிமுக இயக்குனர் விஜய் சுகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.திண்டுக்கல் லியோனி மகன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மாலை மலர்

சியா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் சுபா, சுரேஷ் ராம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் மாண்புமிகு பறை. இப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் சுகுமார் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார். கதாநாயகனாக திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ளார். காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக்ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பறை இசையின் பெருமை சொல்லும் இப்படம் எல்லா இசையும் ஒன்றுதான். ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் புகழும் மட்டுமே பறை இசைக்கு கிடைப்பதில்லை, அந்த பறை இசையின் பின்னணியை, வலியை, பெருமையை சொல்லும் படைப்பாக இப்படத்தை உருவாக்கி உள்ளோம் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலான ஆதி சிவன் அடித்த பறையடா.. பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. முழுப் பாடல் வருகிற 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.