சினிமா செய்திகள்

கூலி படத்தில் ரஜினி சார் வாய்ஸ் AI-தான்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருப்பதைவிட அதனுடைய உதவி அதிகமாக இருக்கும். AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

மாலை மலர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தற்போதுவரை உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து, ரஜினிகாந்தின் கரியரில் மூன்றாவது ரூ.500+ கோடி படமாக இது அமைந்துள்ளது.

இந்நிலையில் கலவையான விமர்சனங்களை கொண்டுள்ள இந்த படத்தில் AI உதவியுடன் ரஜினியின் குரல் சேர்க்கப்பட்டது என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

AI உதவியுடன் கூலி திரைப்படத்தில் ரஜினியின் குரல் சேர்க்கப்பட்டது. வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருப்பதைவிட அதனுடைய உதவி அதிகமாக இருக்கும். AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறினார்.