சினிமா செய்திகள்

கூலி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ்!

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.

மாலை மலர்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் படத்தில் இடம் பெற்ற பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார். படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகிறது என தெரிவித்துள்ளார்.