சினிமா செய்திகள்

தமிழ்நாட்டில் மட்டும் `குட் பேட் அக்லி' படம் 172 கோடி வசூல்

'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது.

மாலை மலர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்தது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

இந்நிலையில் திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 172.3 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அஜித் நடித்த திரைப்படங்களில் அதிக வசூலித்த திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது.