சினிமா செய்திகள்

ஹரி ஹர வீரமல்லு படத்தின் BTS வீடியோ வெளியீடு

பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், மற்றும் நாசர் உட்பட பல நட்சத்திர நடிகர்கள் உள்ளனர்.நடிகர் பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

மாலை மலர்

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாராகவும், ஆந்திராவின் துணை முதலமைச்சராகவும் இருப்பவர் பவன் கல்யாண். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.

மெகா சூர்யா புரொடக்ஷன் சார்பாக ஏ. தயாகர் ராவ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளனர்.

இந்தப் படம், முகலாயப்பேரரசர் காலத்தில் வாழ்ந்த அரசர் அவுரங்கசீப் பற்றிய புனைவுக்கதை.

இந்தப் படத்தில் பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், மற்றும் நாசர் உட்பட பல நட்சத்திர நடிகர்கள் உள்ளனர். இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா மற்றும் ஞானசேகர் வி.எஸ் ஆகியோரின் ஒளிப்பதிவு செய்துள்ளனர். எம்.எம் கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தொடர்ந்து, நடிகர் பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் பாபி தியோல் வால் ஏந்திய படி காட்சியளிக்கிறார். திரைப்படம் வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தின் பிடிஎஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.