சினிமா செய்திகள்

ரிஷப் ஷெட்டி தேசிய விருதுக்கு தகுதியானவர்: காந்தாரா படத்தை பாராட்டிய அட்லி

'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. 'காந்தாரா சாப்டர்1' படம் உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளது.

மாலை மலர்

2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

'காந்தாரா சாப்டர்1' படம் உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்து வருவதால் இனி வரும் நாட்களில் மேலும் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தை பாராட்டி பேசிய இயக்குனர் அட்லி, "காந்தாரா சாப்டர் 1 படம் வெளியான அன்று நான் ஆம்ஸ்டர்டமில் இருந்தேன். அப்போது 2.5 மணிநேரம் பயணம் செய்து தியேட்டரில் படம் பார்த்தேன். உடனடியாக ரிஷப் ஷெட்டிக்கு போன் செய்து பாராட்டுகளை தெரிவித்தேன். ஒரு இயக்குனராக இந்த மாதிரி படத்தை உருவாக்குவதே மிக கடினம். அனால் ஒரு நடிகராகவும் ஹீரோவாகவும் அந்த ரிதத்தை அவர் கொண்டு வந்துள்ளார். இந்த படத்திற்க்காக ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.