ராசிபலன்

Today Rasipalan- இன்றைய ராசிபலன் 26.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு திருமண முயற்சி கைகூடும்

இன்றைய ராசிபலன் 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மாலை மலர்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

ரிஷபம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.

மிதுனம்

திருமண முயற்சி கைகூடும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள்.

கடகம்

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

சிம்மம்

ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

கன்னி

காரிய வெற்றி ஏற்படும் நாள். கடமையைச் சரிவரச் செய்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர்.

துலாம்

விரோதிகள் விலகும் நாள். வரவு திருப்தி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமைப்படுவீர்கள்.

விருச்சிகம்

நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

தனுசு

முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவார்கள். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.

மகரம்

செல்வாக்கு உயரும் நாள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

கும்பம்

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மீனம்

வளர்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள நண்பர்கள் உதவுவர்.