ராசிபலன்

Today Rasipalan | இன்றைய ராசிபலன் 23.3.2026: இந்த ராசிக்காரர்களுக்கு பயணங்களால் பலன் கிடைக்கும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.

மாலை மலர்

மேஷம்:

நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

ரிஷபம்

வளர்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். பூமி விற்பனையால் லாபம் உண்டு. உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு உண்டு.

மிதுனம்

விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களைத் தேடிவரலாம். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை ஏற்படும்.

கடகம்

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்கமான நிலை மாறும்.

சிம்மம்

எதிர்கால நலனில் அக்கறை காட்டும் நாள். பயணம் பலன் தரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வரன்கள் முடிவாகலாம்.

கன்னி

குறுக்கீடுகள் அதிகரிக்கும் நாள். எதையும் துணிந்து செய்ய இயலாது. காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் பிரச்சனை உண்டு.

துலாம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். ஆதாயத்தைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

விருச்சிகம்

காரிய வெற்றி ஏற்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார நிலை உயரும்.

தனுசு

இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் உண்டு.

மகரம்

மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் கவுரவப் பொறுப்புகள் தேடி வரலாம்.

கும்பம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். காரிய வெற்றிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர். தொழிலில் புதியவர்கள் வந்திணைவர்.

மீனம்

வளர்ச்சி கூடும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். பயணத்தால் பலன் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.