ராசிபலன்

இன்றைய ராசிபலன் 22.11.2025: இவர்களுக்கு வரவு திருப்தி தரும்

இன்றைய ராசிபலன்12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மாலை மலர்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

தடைகள் அதிகரிக்கும் நாள். தவிர்க்க முடியாத செலவுகளால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

ரிஷபம்

தனவரவு திருப்தி தரும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள விரும்புவீர்கள்.

மிதுனம்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளை நீக்குவீர்கள்.

கடகம்

நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர்.

சிம்மம்

வரவு திருப்தி தரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புது முயற்சியில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

துலாம்

யோகமான நாள். இடம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

விருச்சிகம்

காரியங்களில் வெற்றி ஏற்படும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். வீடு வாங்கும் யோகம் உண்டு.

தனுசு

நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும் நாள். பிற இனத்தாரால் பெருமை வந்து சேரும். சாதுர்யமாகச் செயல்பட்டு பொருள்வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

மகரம்

வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் எதிர்பாராத விதத்தில் வந்துசேரும். பயணம் பலன் தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்

நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.