மேஷம்
சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்
மனக்குழப்பம் அகலும் நாள். வாகன யோகம் உண்டு. எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
வாக்குவாதம் அகன்று வளம் காணும் நாள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் பணியை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
கடகம்
இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். கற்றவர்களின் பாராட்டுகளால் கனிவு கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். கடிதம் கனிந்த தகவலை தரும்.
சிம்மம்
இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் விரயம் உண்டு.
கன்னி
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நேசித்த நண்பர்கள் பகையாக மாறலாம். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படும்.
துலாம்
யோகமான நாள். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் உண்டு.
விருச்சிகம்
பண வரவு திருப்தி தரும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். அயல்நாட்டு அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள்.
தனுசு
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
மகரம்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்பு செலவுகள் உருவாகும். பெற்றோர்களின் ஆதரவு திருப்தி தரும்.
கும்பம்
வரவு திருப்தி தரும் நாள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிவர். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக முடியும்.
மீனம்
நினைத்த காரியம் நிறைவேறி நிம்மதி காணும் நாள். பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகள் உண்டு. தொழிலில் இருந்த மறைமுக போட்டிகள் அகலும்.