ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும்

ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும். திருமங்கலம் கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும்
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்தகூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி னர்.

செக்கானூரணி பகுதிக்கு மின் மயானம் வேண்டாம். மயானம் செல்வதற்கான பாதை பட்டா இடத்தில் உள்ளதால் பொதுமக்கள் வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்ததாக கவுன்சிலர் ஓம் ஸ்ரீ முருகன் தெரி வித்தார். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இதற்கான பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து வாகைகுளம் கவுன்சிலர் மின்னல் கொடி ஆண்டிச்சாமி கூறுகையில், வாகைகுளத்தில் உள்ள சுகாதார மையம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். கொக்குளம் கவுன்சிலர் சிவபாண்டி பேசும்போது, மதுரை-போடி ரெயில் செல்லும் வழியில், செக்கானூரணியில் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும். ஏற்கனவ ரெயில்வே நிலையம் இருந்தது. தற்போது காமராஜர் பல்கலைக்கழகம் கருமாத்தூர் ஆகிய 2 பகுதிகளிலும் புதிய ரெயில் நிலையங்கள் தொடங்கப் பட்டுள்ளது. எனவே செக்கானூர ணியிலும் ரெயில் நிலையம் ஏற்படுத்த வேண்டும். இதற்கான தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசு அனுப்பி வைக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

சாத்தக்குடி ஒன்றிய கவுன்சிலர் பரமன் பேசுகையில், சாத்தங்குடி கிராம பகுதியில் சாக்கடை தூர்வாறுவது இல்லை. தெரு விளக்குகள் சரியாக எரிவது இல்லை. வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்யப் படாமல் உள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன் இதை சரி செய்ய வேண்டும் என்ன பேசினார்.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி மற்றும் உச்சப்பட்டி செல்வம் ஆகியோர் பேசுகையில், மாநகராட்சி நகராட்சி கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் அரசு அறிவித்துள் ளது. இதேபோல் ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனை அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாண்டியன், சங்கர்கைலாசம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com