ரசிகர்கள் டிரெண்ட் செய்யும் விஜய் சேதுபதியின் ஹேஷ் டேக்

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் முன்னோட்ட வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்கள் டிரெண்ட் செய்யும் விஜய் சேதுபதியின் ஹேஷ் டேக்
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

'ஜவான்' திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜவான் படத்தில் விஜய் சேதுபதியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான ஹேஷ் டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com