அஜித்தின் துணிவு படத்தின் புதிய தகவல்

அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
அஜித்
அஜித்
Published on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக புதிய தகவல் பரவி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துணிவு
துணிவு

துணிவு

1985-ம் ஆண்டு பஞ்சாப்பில் நாட்டையே உலுக்கிய பயங்கர வங்கி கொள்ளை சம்பவம் நடந்தது. 15 பேர் போலீஸ் சீருடை அணிந்து ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்தனர். வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்கள் பல நாட்கள் திட்டமிட்டு நுணுக்கமான முறையில் இந்த கொள்ளையை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த வங்கி கொள்ளையின் உண்மை சம்பவம் தான் தற்போது துணிவு திரைப்படமாக தயாராகி வருவதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com