Today Rasipalan: இன்றைய ராசிபலன் 24.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு செல்வநிலை உயரும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
Rasipalan
Published on: 

மேஷம்

நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். வெளியூர்ப் பயணங்கள் செல்லும் திட்டம் நிறைவேறும். பணவரவு திருப்தியாக இருக்கும். தொழில் வளர்ச்சியுண்டு.

ரிஷபம்

தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொலைபேசி வழிச் வழிச் செய்தி மகிழ்ச்சி தரும். சகோதர சச்சரவுகள் அகலும். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.

மிதுனம்

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற இயலாது. விரயங்களால் கலக்கமடைவீர்கள்.

கடகம்

தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும் நாள். வெளியூர்ப் பயணமொன்றால் விருப்பம் நிறைவேறும். புதியவர்களின் நட்பால் பொருளாதார நிலை உயரும்.

சிம்மம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். ஒன்றுமாக வரவைக் காட்டிலும் செலவு கூடும். குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர்.

கன்னி

காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். உறவினர்கள் வழியில் ஆதரவு உண்டு. வாகனப் பழுதுகளைச் சீர் செய்வீர்கள்.

துலாம்

செல்வநிலை உயரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பயணங்களில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் சொற்களுக்கு மதிப்பு உண்டாகும்.

விருச்சிகம்

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். எதிர்கால முன்னேற்றம் கருதித் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

தனுசு

4 மனதிற்கினிய சம்பவம் நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். அதிக செலவில் முடிக்க நினைத்த வேலையொன்றை குறைந்த செலவில் முடிப்பீர்கள்.

மகரம்

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் உள்ள மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள்.

கும்பம்

சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும் நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் தற்காலிகப்பணி நிரந்தரப் பணியாக மாறும்.

மீனம்

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com