

தர்ம சிந்தனை மேலோங்கும் நாள். தொழில் தொடங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
யோகமான நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் துணைபுரிவர். திருமணப் பேச்சுகள் கைகூடும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பக்கத்தில் உள்ளவர்களின் பாசமழையில் நனையும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
புதிய பாதை புலப்படும் நாள், நேற்றைய பிரச்சினை முடிவிற்கு வரும். குதூகலப் பயணம் உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் நாள். வரவு வருவதற்கு முன்னே செலவு காத்திருக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும்.
முயற்சி கைகூடும் நாள். தனவரவு திருப்தி தரும். வாகனப் பழுதுகளால் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் ஏற்படலாம்.
மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். தொட்டது துலங்கும். தனவரவு திருப்தி தரும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.
சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகும் நாள். நினைத்தது நிறைவேறும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். ஆதாயமற்ற அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். அருகில் உள்ள வர்களின் ஆதரவு குறையும்.
வளர்ச்சி கூடும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
ஆலய வழிபாடு அமைதியை வழங்கும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.