என் மலர்
- நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெறுகிறது.
- பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழலில், இந்தியப் படைகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் பேரணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் ஆகியோர் கையில் தேசியக் கொடி ஏந்தி பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பேரணி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ரஷியா- உக்ரைன் இடையே 30 நாள் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
- அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் பரிந்துரையை ஆதரவாக இருப்பதாக ஜெர்மனி, இங்கிலாந்து தகவல்.
உக்ரைன் ரஷியா போர் தொடுத்து 3 வருடங்கள் நிறைவடைந்து 4ஆவது வருடமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போர் நிறுத்தத்திற்கு முயற்சி மேற்கொண்டன. ஆனால் ரஷியாவும், உக்ரைனும் பேச்சுவார்த்தைக்கு முன்வர சம்மதிக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் உக்ரைன்- ரஷியா இடையே 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை வழங்கியது. இதனால் உக்ரைன் ஏற்றுக்கொண்டது. ஆனால் ரஷியா ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா பிரான்ஸ், இங்கிலாந்து உளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் ரஷியாவுக்கு போர் நிறுத்தம் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் உக்ரைன் சென்றுள்ளனர்.
அவர்கள் உக்ரைன் அதிபரை சந்தித்து பேசினர். அப்போது வருகிற திங்கிட்கிழமையில் இருந்து 30 நாள் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தியதாக தெரிகிறது. இதை உக்ரைன் அதிபர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக உக்ரைன் நிதியமைச்சர் அந்த்ரி சிபிஹா "ரஷியாவோ முழுமையான, நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகள் தயாராக உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
உக்ரைன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், ரஷியாவுக்கு மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுக்கும் எனத் தெரிகிறது. ஆனால் ரஷியா போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமா? எனத் தெரியவில்லை.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ரஷியா 3 நாள் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், 700-க்கும் மேற்படட முறை அதை மீறியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
- இந்தியாவின் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுபேதார் மேஜர் பவன்குமார் வீரமரணம் அடைந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் ரெஜிமேண்ட் மேஜராக பணிபுரிந்து வந்த பவன்குமார் இறப்புக்கு இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
- தமிழ் சினிமாத்துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் நிறுவனமாகும்.
- இவரது மகளான ப்ரீத்தி-க்கு நேற்று திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
தமிழ் சினிமாத்துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் நிறுவனமாகும்.இதன் உரிமையாளர் ஐசரி கணேஷ் ஆவார். இவரது மகளான ப்ரீத்தி-க்கு நேற்று திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ் சினிமாத்துறை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
மேலும் நேற்று ஐசரி கணேஷ் அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களில் இருந்து 1500 மேற்பட்ட ஆதரவற்ற மக்கள் இவரது மகள் திருமணத்தில் கலந்துக் கொண்டனர். அவர்கள் மணமக்களை அசிர்வதித்து மனதார உணவை உண்டு மகிழ்ந்தனர். பல மாற்று திறனாளிகள் கலை நிகழ்ச்சிகளை செய்தனர். இவர்களுடன் ஐசரி கணேஷும் இணைந்து ஆடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் இவர் செய்த இந்த நற்காரியத்தை இணையத்தில் பாராடி வருகின்றனர்.
- நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெறுகிறது.
- பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று மாலை 5 மணியளவில் பேரணி நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், பயங்கரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கியது.
இந்த பேரணி தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே வரை நடைபெறுகிறது.
இந்தப் பேரணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி பங்கேற்றுள்ளனர்.
பேரணி செல்லும் சாலையில் மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ்கள், குடிநீர் தொட்டிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- வழக்கமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தான் தொடங்கும்
- இந்தாண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாட்கள் முன்கூட்டியே தொடங்கும்
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தாண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே வருகிற 13-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளது. இதனால் ஜூன் மாதத்திற்கு பதிலாக மே மாதமே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாட்கள் முன்கூட்டியே வரும் 27ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தான் தொடங்கும்.
முன்னதாக தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்களா விரிகுடா, நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகளில் வருகிற 13-ந்தேதி தென்மேற்கு பருவமழை உருவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
- பதற்றத்தை பயன்படுத்தி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
- ஏற்கனவே இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ள நிலையில் 8 வீரர்கள் தற்போது காயம் அடைந்துள்ளனர்.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்திவரும் நிலையில், இருநாட்டு எல்லையில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.
இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் உள்ள ஆர்.எஸ். புரா செக்டாரில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கு எதிராக பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 8 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவம முகாமுக்கு சிகிச்சைக்கான கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை சுமார் 2000 கி.மீ. நீளம் கொண்டதாகும். இந்த எல்லையில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மன்னிப்பு கேட்பதை போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மன்னிப்பு கேட்பது போன்று பரவும் வீடியோ போலியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜெய்சங்கர் மன்னிப்பு கேட்பது போன்று வீடியோ உருவாக்கி வலைதளங்களில் பரப்பப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பொதுமக்கள் இதுபோன்ற தவறான வீடியோக்களை நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- மே 7 மாதம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
- இந்த தாக்குதலுக்கு ஆபரேசன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து மே 7 மாதம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இந்த தாக்குதலுக்கு ஆபரேசன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது.
இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்திய ராணுவத்தால் மே 7ல் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 5 முக்கிய பயங்கரவாதிகளின் விவரங்கள் தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள்:
1. முடாசர் காதியன் காஸ் என்கிற அபு ஜுண்டால் - லஷ்கர் இ தொய்பா பொறுப்பாளர் - முடாசர் காதியன் இறுதிச்சடங்கில்தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் பங்கேற்று மரியாதை செய்தனர்
2. ஹபீஸ் முகமது ஜமீல் - ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பொறுப்பாளர் - நிதி திரட்டுவது, இளைஞர்களை மூளைச்சலவை செய்து சேர்ப்பது உள்ளிட்டவை ஜமீலின் முக்கிய பணியாகும்.
3. முகமது யூசுப் அசார் (எ) உஸ்தாத் - ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர் - ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு பயிற்சி தருவது. காஷ்மீரில் பல தாக்குதலில் உஸ்தாத் ஈடுபட்டுள்ளார்.
4. காலித் (எ) அபு ஆகாஷா - லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி - காஷ்மீரில் பல்வேறு தாக்குதலில் ஈடுபட்ட காலித், ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தும் வேலையும் ஈடுபட்டவர்
5. முகமது ஹசன்கான் - ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தளபதி - காஷ்மீரில் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் முகமது ஹசன் மூளையாக செயல்பட்டவர்.
- விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் சீமான் நடித்துள்ளார் .
- சீமான் அடுத்ததாக தர்மயுத்தம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் தற்போது முழு நேர அரசியலில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் சீமான் விவசாயியாக நடிப்பதாக தகவல் வெளியானது. மு.களஞ்சியம் சீமானை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இதைத்தொடர்ந்து சீமான் அடுத்ததாக தர்மயுத்தம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.
படக்குழு வெளியிட்ட இந்த போஸ்டரில் 'தீர விசாரிப்பதே மெய்' என்ற ஹேஷ்டேக் உடன் வெளியாகியுள்ளது, சீமான், அனு சித்தாரா மற்றும் ஆர்கே சுரேஷ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர் சுப்பிரமணியம் என்பவர் எழுதி இயக்கும் இந்த படத்தை ஆதம்பாவா மற்றும் சிவக்குமார் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூரி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.