

தமிழ்நாட்டில் 4,829 'டாஸ்மாக்' மது கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறையாக 'டாஸ்மாக்' இருக்கிறது.
ஆனால் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைந்துள்ளது. விஜய் முதலமைச்சராக பதவியேற்றவுடன், தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களைப் பாதுகாக்கவும் 65 சிறப்பு படைகள் அமைக்கப்படும் என்று ஆணை பிறப்பித்தார்.
விஜய் பிறப்பித்த இந்த அதிரடி உத்தரவு மூலம், 'டாஸ்மாக்' கடைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையத்திற்கு 500 மீட்டர் எல்லைக்குள் உள்ள 717 மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை 2 வாரத்திற்குள் மூட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவுபடி தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட கடந்த மே மாதம் 11ம் தேதி முதலமைச்சர் உத்தரவிட்டார்.
சில டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக பிரச்சனை இருந்த நிலையில் தற்போது அனைத்தும் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.