சுயமாக சிம்பொனி உருவாக்கிய இளம் இந்திய இசையமைப்பாளர் - விரைவில் சென்னையில் அரங்கேற்றம்!

உலகின் மிகச்சிறந்த இசைக்குழுக்களில் ஒன்றான 'லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா'வால் வாசிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுயமாக சிம்பொனி உருவாக்கிய இளம் இந்திய இசையமைப்பாளர் - விரைவில் சென்னையில் அரங்கேற்றம்!
Published on

சென்னையை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம். தனது 2 வயதில் டிரம்ஸ் வாசிக்க தொடங்கிய இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகின் சிறந்த இசை கலைஞர் விருதை வென்று அசத்தினார்.

மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடித்த பரோஸ் 3டி திகைப்படத்திற்கு இசையமைத்துள்ள லிடியன் நாசஸ்வரம் தற்போது தனது முதல் சிம்பொனியை உருவாக்கி இருக்கிறார். இதன் மூலம், சுயமாக சிம்பொனி உருவாக்கி பதிவு செய்த இளம் இந்திய மற்றும் ஆசிய இசையமைப்பாளர் என்ற பெருமையை லிடியன் நாதஸ்வரம் பெற்றிருக்கிறார்.

இவரது முதல் சிம்பொனி அரங்கேற்ற நிகழ்வு விரைவில் சென்னையில் நடைபெற இருக்கிறது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம், "New Beginnings" என்ற தலைப்பில், எனது முதல் சிம்பொனியாக (Symphony No. 1) உலகிற்கு ஒரு பணிவான இசைப்படைப்பை வழங்குகிறேன்.

பிரபஞ்சத்தின் ஆசியுடனும், உண்மையான தரவுகளின் அடிப்படையிலும், ஒரு சுயமான சிம்பொனியை உருவாக்கி பதிவு செய்த மிக இளம் வயது இந்திய மற்றும் ஆசிய இசையமைப்பாளராக அங்கீகரிக்கப்பட்டதில் நான் பெருமை கொள்கிறேன்.

எங்களின் இந்த சிம்பொனி, புகழ்பெற்ற மேட் டங்க்லி (Matt Dunkley) அவர்களின் தலைமையில், உலகின் மிகச்சிறந்த இசைக்குழுக்களில் ஒன்றான 'லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா'வால் (London Symphony Orchestra) வாசிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ ஒலிப்பதிவு வெளியீடு மற்றும் முதல் அரங்கேற்றம், உலக இசை தினமான ஜூன் 21-ஆம் தேதியன்று மாலை 4 மணி முதல் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே அனைத்து இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இந்த சிம்பொனி வெளியிடப்படும்.

இதற்கான டிக்கெட்டுகள் தற்போது கிடைக்கின்றன. நிகழ்ச்சியின் பெயர்: Lydian’s Symphony No. 1 “New Beginnings”

இந்த கலை வடிவம், இசைக்கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆதரவாளர்கள் மற்றும் இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக, மிக குறைந்த கட்டணத்துடன் கூடிய நிகழ்ச்சியாக இது நடத்தப்படுகிறது.

எங்கள் திட்டத்தின் தயாரிப்பாளரான ஆண்ட்ரூ டி. மெக்கே அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த நன்னாளில் எனது அன்புக்குரிய நலம் விரும்பிகள், இசைக்கலைஞர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்வேன்.

இது ஒரு தொடக்கம் மட்டுமே," என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com