டெல்லியில் இருந்து சென்னை வந்த அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு!

பாஜகவுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக, அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லியில் இருந்து சென்னை வந்த அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு!
Published on

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜகவிலிருந்து விலகுவது தொடர்பான கடிதத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினிடம் கொடுக்க டெல்லி சென்ற அண்ணாமலை, இன்று சென்னை திரும்பினார்.

முன்னதாக, காலை தனது புது அமைப்பான ‘இது நம்ம இயக்கம்’ தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அமைப்பை பெரிதாக்கி, பின்னர் அரசியல் கட்சியாக பதிவு செய்யவுள்ள அண்ணாமலை அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி எனவும் அறிவித்துள்ளார்.

தற்போதுவரை இந்த இயக்கத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com