நிதி ஆயோக் கூட்டம்: முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல் அமைச்சர் விஜய் வரும் 11-ந் தேதி டெல்லி செல்கிறார்.
நிதி ஆயோக் கூட்டம்: முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்!
Published on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று பொறுப்பேற்ற பிறகு முதல்-அமைச்சர் விஜய் கடந்த மே மாதம் 27-ந் தேதி டெல்லிக்கு சென்று வந்தார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாடு நலன்கள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தார்.

கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதிக்க கூடாது என்றும், தமிழ்நாடு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசினார்.

இந்தப் பயணத்தின்போது கூட்டணி கட்சியான காங்கிரசின் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரை அவர் சந்தித்து பேசவில்லை.

மாநில முன்னேற்றத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனை செய்வதற்கான, நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெறுவது வழக்கம். அதில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்பார்கள்.

இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் வருகிற 11-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய், வருகிற 11-ந் தேதி டெல்லி செல்ல இருக்கிறார். இந்த பயணத்தின் போது அவர் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com