search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெற்கு ரெயில்வே"

    • வருகிற 20-ந்தேதி காலை 4.15 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
    • செங்கல்பட்டில் இருந்து இன்று மற்றும் நாளை இரவு 11 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் எழும்பூர்- கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்றும், நாளையும் என 2 நாட்கள் இரவு நேரத்தில் இயக்கப்படும் 15 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 9.30, 11.30, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.40, 11.20, 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 4.15 மற்றும் இரவு 9.30, 11.20, 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்களும், தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.40, 11.15, 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் 20-ந்தேதி காலை 4.15 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டில் இருந்து இன்று மற்றும் நாளை இரவு 11 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் எழும்பூர்- கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இன்று மற்றும் நாளை இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 3.55, 4.35 மணி மற்றும் 20-ந்தேதி காலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை- எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிக்கெட் கவுண்டரில் மொழி பிரச்சினையால் கால தாமதம் போன்ற பிரச்னை ஏற்படுகிறது.
    • ரெயில் ஓட்டுனர்களிடையேயும் மொழி பிரச்சனையால் தகவல் தொடர்பு என்பது முழுமையானதாக இல்லாமல் இருக்கிறது.

    ரெயில்வே துறையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இதில் பணிபுரிந்து வருகிறார். தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய தென்மாநிலங்களில் பெரும்பாலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக பணிபுரிகிறார்கள். இதனால் பயணிகள்- ஊழியர்கள் இடையிலான இடைவெளி அதிகமாக இருக்கிறது.

    குறிப்பாக முன்பதிவு செய்யும்போது ஏராளமான அந்தந்த மாநில மொழிகள் தெரியாத காரத்தினால் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதேபோல், ரெயில் ஓட்டுனர்களிடையேயும் மொழி பிரச்சனையால் தகவல் தொடர்பு என்பது முழுமையானதாக இல்லாமல் இருக்கிறது. எனவே இந்த பிரச்னைகளை சரி செய்ய தெற்கு ரயில்வே ஒரு முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது.

    அதாவது வட மாநில ஊழியர்களுக்கு அவர்கள் எந்த மாநிலத்தில் பணி செய்கிறார்களோ அந்த மாநிலத்தின் மொழியை சொல்லிக்கொடுப்பது என தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. ரெயில்நிலையம் டிக்கெட் கவுண்டரில் பணிபுரியும் ஊழியர்கள், ரெயில் நிலையில் மற்றும் ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர், ஆர்பிஎஃப் வீரர்கள் இதன் மூலம் பயடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட ரெயில்வே மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    அதில் "தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பணிபுரியும் பல ஊழியர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களால் உள்ளூர் மொழிகளில் பேச முடிவதில்லை. இதை உணர்ந்த தெற்கு ரெயில்வே, தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது கன்னடம் ஆகிய மொழிகளில் பணிபுரியும் அறிவைப் பெறுவது அவசியம் கருதுகிறது. இதன் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவை அளிக்க முடியும் என்று கருதுகிறது.

    எனவே அனைத்து துறைகளின் தலைவர்கள், பணிமனைகள், ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி மையங்கள், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட ரெயில்வே மேலாளர்களுக்கு பிராந்திய மொழி கற்றலுக்கான பயிற்சித் தொகுதியை உருவாக்க அறிவுறுத்தப்படுகிறது. இவர்கள் அனைவரும் பயிற்சி திட்டங்களில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நிர்வாக காரணங்களால் இந்த ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
    • இந்த அறிவிப்பால் பொதுமக்களும், பக்தர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு தினசரி பாஸ்ட் லோக்கல் மின்சார ரெயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும்.

    வேலூர், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாஜா சாலை, சோளிங்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வேலை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் இந்த ரெயிலைப் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த ரெயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே சமீபத்தில் அறிவித்தது.

    அதன்படி மே 2-ம் தேதி முதல் வண்டி எண் 06033 சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று வேலூர் ரெயில் நிலையத்துக்கு 9 மணி 35 நிமிடங்களுக்குச் சென்றடையும். அதன்பின், அங்கிருந்து பெண்ணத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மடிமங்கலம், போளூர் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 12 மணி 5 நிமிடங்களுக்குச் செல்லும்.

    திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் போளூர், மடிமங்கலம், ஆரணி ரோடு, சேதாரம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், பெண்ணத்தூர் ரெயில் நிலையங்களில் நின்று வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு 5.40 மணிக்கு வந்து சேரும்.

    அதனைத்தொடர்ந்து வேலூர் ரெயில் நிலையத்தில் இருந்து அனைத்து ரெயில் நிலையங்கள் வழியாக 9 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அடுத்த அறிவிப்பு வரும்வரை நிர்வாக காரணங்களால் இந்த பாசஞ்சர் ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே சென்னைகோட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்களும், பக்தர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • கோடை விடுமுறை என்பதாலும் பயணிகளின் வசதிக்காகவும் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும்.

    சென்னை:

    பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. எனவே, பல்வேறு வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த வகையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் மற்றும் வாரத்தில் 3 நாள் மட்டும் இயக்கும் வகையில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் என தெற்கு ரெயில்வே சார்பில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கோடை விடுமுறை என்பதாலும் பயணிகளின் வசதிக்காவும் இந்த வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06067) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து இதே தேதிகளில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06068) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 3, 4, 5, 10, 11, 12, 17, 18, 19, 24, 25, 26,31 மற்றும் ஜூன் 1, 2, 7, 8, 9, 14, 15, 16, 21, 22, 23, 28, 29, 30 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06057) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, இதே தேதிகளில் நாகர்கோவில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு வரும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06058) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் மே 1-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
    • நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் மே 12-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்- தாம்பரம், சென்னை சென்ட்ரல்- கேரள மாநிலம் கொச்சுவேலி, சென்ட்ரல்-நாகர்கோவில் இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில்களின் சேவை மே 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    அதன்படி, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06012) மே 5-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011) மே 6-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டிக்கப்படுகிறது.

    அதே போல, சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (06043) மே 1-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை (புதன்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (06044) மே 2-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை (வியாழக்கிழமை) நீட்டிக்கப்படுகிறது.

    நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (06019) மே 5-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06020) மே 6-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டிக்கப்படுகிறது.

    நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (060231) மே 12-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06022) மே 13-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை (திங்கட் கிழமை) நீட்டிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 350 கிராம் அளவுள்ள தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது சாம்பார் சாதம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ரூ.50-க்கு விற்கப்படுகிறது.
    • தெற்கு ரெயில்வே அளவில் 34 ரெயில் நிலையங்களில் இந்த குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மதுரை:

    தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2-ம் வகுப்பு பொதுப் பெட்டிகளில் பயணம் செய்யும் ரெயில் பயணிகளுக்கு சுகாதாரமான, சுவையான உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ரெயில் நிலையங்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகள் நிற்கும் இடங்களில் குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    250 கிராம் அளவுள்ள தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம் அல்லது பருப்பு கிச்சடி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ஊறுகாயுடன் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல 350 கிராம் அளவுள்ள தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது சாம்பார் சாதம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ரூ.50-க்கு விற்கப்படுகிறது. 325 கிராம் பூரி, பஜ்ஜி ஆகியவை ஊறுகாயுடன் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 200 மி.லி. குடிநீர் பாட்டில் ஒன்று ரூ.3-க்கு விற்கப்படுகிறது. ரெயில் நிலையங்களில் குறைந்த கால அளவில் நின்று செல்லும் ரெயில்களில் பொதுப்பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    உணவைத்தேடி அங்கு மிங்கும் பயணிகள் அலைந்து செல்லாத வகையில் பொதுப்பெட்டிகளுக்கு அருகிலேயே நடைமேடைகளில் இந்த விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வே அளவில் 34 ரெயில் நிலையங்களில் இந்த குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்திய ரெயில்வே அளவில் 100 ரெயில் நிலையங்களில் 150 விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய முறை விற்பனைக்கு பொதுபெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை கோட்டத்தில் 5 ரெயில் நிலையங்களில் மலிவு விலை உணவு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.
    • 200 மில்லி தண்ணீர் பாட்டில் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    ரெயில் நிலையங்களில் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை தெற்கு ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது.

    இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) சார்பில் கோடை காலத்தில் ரெயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் பயன்பெறும் வகையில் முக்கியமான ரெயில் நிலையங்களில் பொதுப் பெட்டிகள் நிற்கும் பகுதியில் இந்த மலிவு விலை உணவு கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

    சென்னை கோட்டத்தில் 5 ரெயில் நிலையங்களில் மலிவு விலை உணவு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் திருச்சி கோட்டத்தில் 3, சேலம்-4, மதுரை-2, பாலக்காடு-9, திருவனந்தபுரம் கோட்டம்-11 என முதல் கட்டமாக 34 ரெயில் நிலையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகள் நிறுத்தப்படும் இடத்திற்கு அருகில் இந்த உணவு கவுண்டர் செயல்படுகிறது. 325 கிராம் எடை அளவில் 7 பூரி, மசால் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ.20. தயிர், எலுமிச்சை, புளியோதரை சாதம் 200 கிராம் கொண்ட எக்கனாமி மீல்ஸ் விலை ரூ.20, ஸ்னாக் மீல்ஸ் என்ற பெயரில் 350 கிராம் எடையில் மசால் தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவுகள் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    200 மில்லி தண்ணீர் பாட்டில் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலத்தில் சாதாரண பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பயணிகள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

    • தெலுங்கானா மாநிலம் காசிபேட்-ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • சென்னை சென்டிரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பார்மர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சிறப்பு ரெயில் வருகிற 28-ந் தேதி மற்றும் மே 5, 12, 19 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தாம்பரம் - தன்பாத் மற்றும் ஈரோடு - தன்பாத் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து வரும் 28, மே 5, 12, 19, 26 மற்றும் ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாரந்திர சிறப்பு ரெயில் (06065) புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 8.30 மணிக்கு தன்பாத் சென்றடையும். மறுமார்க்கமாக, தன்பாத்தில் இருந்து வரும் மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06066) மறுநாள் இரவு 10.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இதேபோல, ஈரோட்டில் இருந்து வரும் 26, மே 3, 10, 17, 24, 31 மற்றும் ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06063) புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 8.30 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் சென்றடையும். மறுமார்க்கமாக, தன்பாத்தில் இருந்து வரும் 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06064) புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 2 மணிக்கு ஈரோடு வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானா மாநிலம் காசிபேட்-ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி சென்னை சென்டிரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பார்மர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சிறப்பு ரெயில் (06097) வருகிற 28-ந் தேதி மற்றும் மே 5, 12, 19 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    அதே போல, பார்மரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06098) மே 3 10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22663) மே 4, 11, 18 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) குண்டூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல் ஆகிய வழித்தடத்திற்கு பதிலாக, ரேணிகுண்டா, சுலேஹள்ளி, செகந்திராபாத், காசிபேட், பல்ஹர்ஷா ஆகிய வழித்தடத்தில் செல்லும்.

    அதே போல, ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22664) வருகிற 30-ந் தேதி மற்றும் மே 7, 21 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) மேற்குறிப்பிட்ட வழித்தடத்திலேயே செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சென்னை சென்டிரல்-மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
    • மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 26-ந் தேதி முதல் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22611) இன்று (புதன்கிழமை) முதல் ஹிஜ்லி, கரக்பூர், பட்டா நகர் வழித்தடத்தில் செல்லும்.

    அதேபோல, மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) வருகிற 26-ந் தேதி முதல் 2 மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது
    • பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது.

    இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    எழும்பூரில் இன்று இரவு 10.05க்கு கிளம்பி காலை 6.30க்கு திருச்சி சென்றடைகிறது. மறுமார்க்கமாக நாளை மாலை 6.30க்கு கிளம்பி நள்ளிரவு 2.45க்கு தாம்பரம் வந்தடைகிறது.

    இதற்கு முன்னதாக சென்னை தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது..

    சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (06007) இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் (06008) இயக்கப்படுகிறது.

    • வாக்காளர்கள் சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
    • தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது.

    இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சென்னை தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (06007) இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் (06008) இயக்கப்படுகிறது.

    • 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரெயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌
    • விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் வழியாக கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி தாம்பரம்-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (06001) ஏப்ரல் 18 மற்றும் 20-ந்தேதி ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும்.

    மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி-தாம்பரம் சிறப்பு ரெயில் (06002) ஏப்ரல் 19 மற்றும் 21-ந்தேதி ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    இந்த ரெயில்கள் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 19 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரெயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

    சென்னை எழும்பூர்-கோயம்புத்தூர் சிறப்பு ரெயில் (06003) சென்னையில் இருந்து ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும்.

    மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06004) ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

    இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த ரெயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரெயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×