ராமநாதபுரம்-வாடிப்பட்டியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி-பெண் உயிரிழப்பு

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம், வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி-பெண் உயிரிழந்தனர்.
அசரா பாத்திமா
அசரா பாத்திமா
Published on

மதுரை:

ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் கடற்கரை தெருவைச் சேர்ந்தவர் ஆரிப்கான். இவரது மகள் அசரா பாத்திமா (வயது6).

அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அசரா பாத்திமாவை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசரா பாத்திமா பரிதாபமாக இறந்தார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மீனாட்சி (38).

கடந்த வாரம் காய்ச்சலால் அவதிப்பட்ட மீனாட்சியை வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். காய்ச்சல் குணமாகாததால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மீனாட்சி பரிதாபமாக இறந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com