மதுரையில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி

மதுரையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மதுரையில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி
Published on

மதுரை:

மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (வயது35). கடந்த சில நாட்களாக இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாக வில்லை. பரிசோதனையில் அவருக்கு டெங்கு இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து செந்தில் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை செந்தில் பரிதாபமாக இறந்தார்.

அவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com