search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமமோகனராவிடம் அமலாக்கத்துறை விசாரணை: தமிழக அரசு அனுமதி
    X

    ராமமோகனராவிடம் அமலாக்கத்துறை விசாரணை: தமிழக அரசு அனுமதி

    முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
    சென்னை:

    ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடத்தியது. தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமானவரி துறையினர் மத்திய படை பாதுகாப்புடன் வந்து சோதனை நடத்தினார்கள்.

    முன்னதாக காண்டிராக்டர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் வருமானவரி துறை சோதனை நடத்தியது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ராமமோகன ராவ் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது.

    இதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் பணியில் இருந்து ராமமோகன ராவ் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தன் மீதான வருமானவரி சோதனைக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    அதன்பிறகு ராமமோகன ராவ் மீண்டும் தமிழக அரசு பணியில் நியமிக்கப்பட்டார். தொழில் முதலீட்டாளர்கள் வளர்ச்சி கழக இயக்குனராக பணியாற்றி வருகிறார்.


    இந்த நிலையில் ராமமோகன ராவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    வருமானவரித்துறை சோதனையின் அடிப்படையில் பணபரிமாற்றம் தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொள்கிறது. இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் கூறும்போது, சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ராமமோகன ராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருப்பதாகவும், இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து ராமமோகன ராவிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
    Next Story
    ×