பெரம்பலூரில் மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி: பொதுமக்கள் பீதி

பெரம்பலூரில் மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலியானதால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி: பொதுமக்கள் பீதி
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரம்பலூர் டவுன் மற்றும் துறைமங்கலம் பகுதியில்  கடந்த சில நாட்களாக  டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

கடந்த மாதம் 23-ந்தேதி பெரம்பலூர் எளம்பலூர் சாலையை சேர்ந்த மஞ்சு (வயது 25)  என்பவர்  மர்ம  காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் ஒருவன் பலியாகி உள்ளான்.

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள சாமியப்பா நகரை சேர்ந்தவர் மோகன்,  நகைவேலை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி. இந்த தம்பதியினரின் மகன் நித்தி (5). அங்குள்ள  ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தான். கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நித்தி அங்குள்ள  தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்தான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 2 பேர் பலியான சம்பவம் பெரம்பலூர் பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com