என் மலர்
ஆன்மிகம்
- சிவபெருமான் அன்றைய தினம் படியளக்கச் சென்றுவிட்டு திரும்பி வந்தார்.
- படியளக்கும் லீலை மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது.
உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு அளிக்கிறாரா? இல்லையா? என ஒருமுறை பார்வதி தேவிக்கு சந்தேகம் வந்துவிட்டது.
கடைசியாக அதைச் சோதனை செய்தே பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி ஒரு எறும்பை எடுத்து குவளைக்குள் போட்டு அடைத்து வைத்து விட்டாள் பார்வதிதேவி.
சிவபெருமான் அன்றைய தினம் படியளக்கச் சென்றுவிட்டு திரும்பி வந்தார். அவரை இடைமறித்த பார்வதி, அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே... இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்துவிட்டீர்களா? என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள். ஆம்... அதில் உனக் கென்ன சந்தேகம்...? என்று சிவபெருமான் பதிலளித்தார்.
இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக்கொண்டார் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்ட பார்வதிதேவி, எறும்பை அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக் குடுவையை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்த எறும்பு, ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
சிவபெருமானை மடக்க நினைத்தவர் திகைத்துவிட்டார். அதனை தொடர்ந்து சிவபெருமானிடம் பார்வதி தேவி மன்னிப்பை வேண்டினார்.
எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வழியில் படியளந்து விடுகிறார் இறைவன். மேற்கண்ட திருவிளையாடல் நடந்த நாள்-மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள். இதை உணர்த்துவதற்காகத்தான் இந்த படியளக்கும் லீலை மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது.
- மேஷம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் வாரம்.
- கன்னி உற்சாகம் பொங்கும் மகிழ்ச்சியான வாரம்.
மேஷம்
எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வார இறுதியில் உச்சம் பெற்று ராசியை தனது 4ம் பார்வையால் பார்க்கிறார். இதனால் குடும்பத்தில் நிம்மதி கூடும். சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். நீண்டநாளாக தீராத, தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். தலைமைப்பதவி தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு தகுதிக்கும், திறமைக்கும் தகுந்த வேலை கிடைக்கும். விவேகமாக சிந்தித்து தொழிலை வளப்படுத்துவீர்கள். எதையும் எதிர்கொண்டு லாபகரமான நிலையை அடையப் போகிறீர்கள் தேக ஆரோக்கியத்தில் தெளிவும், சுகமும் ஏற்படும்.உயர் கல்வியால் மேன்மை உண்டாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். 13.1.2026 அன்று மாலை 5.21 முதல்16.1.2026 மாலை 5.48 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்தவொரு செயலிலும் யோசித்து செயல்பட்டால் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.சிக்கனத்துடன் செயல்பட்டால் விரயங்களை தவிர்க்க முடியும். முருகனை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து வழிபட நினைத்தது நடக்கும்.
ரிஷபம்
முன்னேற்றமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தை நோக்கி செல்கிறார். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். எதிர்பார்த்த வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு வீடு மாற்றம் வேலை மாற்றம் செய்ய வேண்டிய சூழல் வரலாம். எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தந்தை மகன் உறவில் பாசமும் மனநிறைவும் உண்டாகும். குல தெய்வ அருளால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளும், சிக்கல்களும் தீரும். சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். திருமணயோகம் கை கூடி வரும்.16.1.2026 மாலை 5.48 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஆடம்பர செலவு களை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பதுடன் ஓய்வு நேரம் குறையும். அலைச்சல் மிகுந்த பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. நெய் தீபம் ஏற்றி அம்பிகையை வழிபடுவது நல்லது.
மிதுனம்
குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். வார இறுதி நாளில் அஷ்டம ஸ்தானம் செல்கிறார். உங்கள் செயலில் ஆற்றலும், வேகமும் கூடும். முக்கிய கடமைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு , உற்சாகம் பிறக்கும்.மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சிலர் பயன்படாத சொத்துக்களை விற்று லாபம் பார்க்கலாம். தன யோகம் சிறப்பாக அமையும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். திருமண முயற்சி விரைவில் நிறைவேறும். பெண்கள் புதிய ஏலச் சீட்டு தொடங்குவார்கள். குழந்தைப்பேறு உண்டாகும். நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும்.தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சீராகும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். கணவன், மனைவியிடம் நல்ல புரிதல் உண்டாகும். புதன்கிழமை கருடாழ்வாரை வழிபடவும்.
கடகம்
மகிழ்ச்சியான வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் சமசப்தம ஸ்தானத்தில் நின்று ராசியை பார்க்கிறார். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வதோடு, குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் ஏற்படும். ஆரோக்கியம், தொழில், கல்வி உத்தியோகம் போன்றவற்றில் நிலவிய தடை, பிரச்சனைகள் சீராகும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், மூத்த சகோதரர் வகையில் ஆதரவும், அன்பும் கிடைக்கும். தந்தை வழி உறவு மேம்படும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்த தம்பதிகள் அல்லது பிரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற தம்பதிகள் இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். கொடுக்கல், வாங்கல் சீராகும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும்.வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. ஸ்ரீ காலபைரவரை வழிபடவும்.
சிம்மம்
தேவையற்ற கடனை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் 6ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். விரக்தி மனப்பான்மை அதிகமாகும். ஆனால் குருவின் பார்வைபட்ட இடங்கள் பல மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. எந்தக்கை உங்களை விட்டாலும் நம்பிக்கையை விடாமல் இருப்பது முக்கியம். புதிய முதலீடுகளை தவிர்த்தல் நலம். பார்க்கும் வேலையை மாற்றக்கூடாது. சிலருக்கு அசையாச் சொத்து, பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப விரயம் உண்டாகும். திறமையான வேலையாட்கள் இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். தன லாப அதிபதி புதனால் பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டு, ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சில தம்பதிகள் தொழில் அல்லது உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபடவும்.
கன்னி
உற்சாகம் பொங்கும் மகிழ்ச்சியான வாரம்.ராசி அதிபதி புதன் 4,7ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தனித் திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் கிடைக்கும். சிலர் சொந்த வீட்டில் இருந்து மன மாற்றத்திற்காக வாடகை வீடு செல்லலாம். அரசு ஊழியர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். திருமணத்தடை அகலும். சிலருக்கு மறுமண யோகம் உண்டாகும். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். சொத்து தொடர்பான செயல்களில் இடைத் தரகர்களை நம்பி பணம் கொடுப்பதை தவிர்க்கவும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பெண்களுக்கு தாய் வழிச் சீதனம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும். கருடாழ்வாரை வழிபட நிரந்தரமான முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் லாப அதிபதி சூரியனுடன் இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் உள்ளது. வாழ்வில் மறக்க முடியாத இனிய நல்ல சம்பவங்கள் நடைபெறும். கடந்த கால நெருக்கடிகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகளும் அதற்கான உதவிகளும் கிடைக்கும். வீடு, தோட்டம் என அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மனதை மகிழ்விக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில், உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். அரசு வழி ஆதரவு கிடைக்கும். சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு தொழில் ரீதியாகவோ, வேறு காரணத்திற்காகவோ வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். அடமானப் பொருட்களை மீட்க தேவையான பணம் கிடைக்கும்.
விருச்சிகம்
தன்னம்பிக்கையான வாரம். ராசி அதிபதி செவ்வாய் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் உச்சம் அடைகிறார்.ஜாதகரின் முயற்சி எளிதில் வெற்றி பெறும். வார ஆரம்பத்தில் தொழிலில் மந்த போக்கு நிலவினாலும் நிலையான முன்னேற்றத்தை எட்டி பிடிப்பீர்கள். பெயர், புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். பெரிய மனிதர்களின் தொடர்பு அரசியல் செலவு ஏற்படலாம். உடன் பிறந்தவர்களின் அன்பும் அனுசரணையும் இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். ஒரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள். மனதில் நிலவிய வெறுமை தேவையில்லாத கற்பனை பய உணர்வு குறையும். இடப்பெயர்ச்சி நடக்கும். கடன் தொல்லை அதிகரிக்கும். தேவையற்ற வழக்குகள் மற்றும் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட சொத்து, நகை, பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். நவீனகரமான பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் பாராட்டும் அன்பும் கிடைக்கும்.விநாயகரை வழிபட தடைகள் அகலும்.
தனுசு
தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் 7,10ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து எண்ணிய பலனை அடைவீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். தன்நிறைவோடு வாழ முடியும். பொருளாதார நெருக்கடி, கடன் படிப்படியாக குறையும்.எதிர்பாராத தனவரவும், அதற்கேற்ப செலவும் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டு. உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். அடமானம் வைத்த பொருளை சொத்துக்களை மீட்பீர்கள். எப்பொழுதோ வாங்கி வைத்த பங்குகளின் மதிப்பு உயரும். அர்த்தாஷ்டமச் சனி நடந்தாலும் ராசியை குரு பார்ப்பதால் வேலை செய்யும் இடத்தில் அனுகூலமான சூழல் காணப்படும்.தம்பதிகளிடம் புரிதல் உண்டாகும். திருமணத்தடை அகலும். மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சித்து நவகிரக குரு பகவானை வழிபடவும்.
மகரம்
பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியில் அஷ்டம அதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். முன் கோபத்தால் பகைமை உருவாகும். சில முக்கிய விஷயங்களை நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் சமாளிக்க முடியும். முன்னோர் சொத்துப் பிரச்சனை நீதிமன்ற படி ஏற வைக்கும் என்பதால் பங்காளிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. எதிர்மறை எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். உண்மையான நண்பர்களையும் ஏமாற்றுபவர்களையும் அடையாளம் காணக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். தந்தையுடன் கருத்து வேறுபாடு அல்லது தந்தையால் நஷ்டம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. கட்டிய வீட்டை பழுது பார்ப்பது அல்லது புதிய மனை வாங்கி வீடு கட்டுவது போன்ற செலவுகளை மேற்கொள்ள நேரும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். லட்சுமி நரசிம்மரை வழிபட கடன் தொல்லை நிவர்த்தியாகும்.
கும்பம்
நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் வாரம். இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் அதிகரிக்கும். குலத் தொழில் செழித்து வளரும்.ராசியில் ராகு இருப்பதால் சிறிய வீட்டில் வாழ்ந்த சிலர் வசதியான வீட்டிற்கு செல்வார்கள்.சுகபோக வாழ்க்கை கிடைக்கும். லவுகீக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு குறுக்கு வழியிலாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற பேராசை மேலோங்கும்.கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் சிறிய கடன் தொகை கிடைக்கும்.விவாகரத்து வழக்கு பிரச்சனை முடிவுக்கு வரும்.11.1.2026 அன்று அதிகாலை 4.52 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நேரத்திற்கு சாப்பிட்டு ஓய்வு எடுப்பது நல்லது. மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மந்தாரை மலர்களால் நவகிரக ராகு பகவானை வழிபடவும்.
மீனம்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய வாரம். ஜென்மச் சனியால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் இல்லம் திரும்புவார்கள். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். மாற்று முறை சிகிச்சையால் நோய்க்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு நீதி மன்ற வழக்குகளுக்காக அதிக பணம் செலவு செய்ய நேரும். அலைச்சல் மிகுதியாகும். திருமணத் தடைகள் அகலும். புத்திர பிராப்தம் உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான முயற்சியில் ஈடுபட உகந்த காலமாகும்.குல தெய்வ கடாட்சம் கிடைக்கும்.தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். 11.1.2026 அன்று அதிகாலை 4.52 முதல் 13.1.2026 அன்று மாலை 5.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஏதாவது செலவுகள் ஏற்படும்.பண விஷயத்தில் யாரையும் நம்ப கூடாது.உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். வாகன யோகம் உண்டு. புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.
ரிஷபம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் கை கொடுத்து உதவுவர். தூர தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமான அழைப்புகள் வரலாம்.
மிதுனம்
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.
கடகம்
கனிவாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
சிம்மம்
லட்சியங்கள் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.
கன்னி
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள்கூட ஒத்துழைப்பு செய்வர். எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
துலாம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கடன் சுமை குறைய புதிய வழி பிறக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. வீடு, வாங்கும் முயற்சி கைகூடும்.
விருச்சிகம்
சுப விரயம் ஏற்படும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலிடத்துக்கு நெருக்கமாவீர்கள்.
தனுசு
வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். உடன்பிறப்புகள் மூலம் உத்தியோக முயற்சி கைகூடும்.
மகரம்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் மணியான யோசனைக்கு நல்ல பாராட்டுகள் கிடைக்கும்.
கும்பம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். நண்பர்களுக்கு வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. நெருக்கமானவர்களுடன் விவாதம் செய்ய வேண்டாம்.
மீனம்
நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக இருக்கும் நாள். விரயங்கள் கூடும். மற்றவர்களை நம்பி செயல்பட இயலாது. அலைச்சல் அதிகரிக்கும்.
- அம்மன் தேரை பெண் இழுப்பது தனிச்சிறப்பாகும்.
- தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது நடந்து வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை மாதம் மாசி வீதிகளில் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதன்பின்னர் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழா பிரசித்தி பெற்றவை. இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலையை குறிக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
திருவிழா தினத்தன்று காலை 5 மணிக்கு சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்படாகி கீழமாசி வீதி வருவர். அங்கு தனித்தனியாக தேர்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து கிளம்பி யானைக்கல், கீழவெளி வீதி, தெற்குவெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை சென்றடைவர்.
அதில் அம்மன் தேரை பெண் இழுப்பது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். திருவிழாவிற்கு செல்பவர்கள் கீழே சிதறி கிடக்கும் அரிசியை எடுத்து கொண்டு வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை.
இந்த மார்கழி மாத அஷ்டமி திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது நடந்து வருகிறது. மேலும் தேர் வரும் பாதைகளை சீரமைத்து தேர் செல்வதற்கு சாலை வசதியை சீரமைத்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது சாலைகள் தேர் செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
- திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-26 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சப்தமி நண்பகல் 12.33 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : அஸ்தம் இரவு 7.37 மணி வரை பிறகு சித்திரை
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
பெருமாள் கோவில்களில் வரதராஜ மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய்க் காட்சி. மாலை தந்தப் பரங்கி நாற்காலியில் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பாலாபிஷேகம். நயினார்கோவில் அன்னை ஸ்ரீ சவுந்தர நாயகி திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் ஆகிய கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள் கோவில், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார சிறப்பு திருமஞ்சன சேவை. திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மாற்றம்
ரிஷபம்-பக்தி
மிதுனம்-தெளிவு
கடகம்-மேன்மை
சிம்மம்-நிறைவு
கன்னி-பரிசு
துலாம்- நன்மை
விருச்சிகம்-பாராட்டு
தனுசு- தனம்
மகரம்-அனுகூலம்
கும்பம்-சுபம்
மீனம்-சுகம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மங்கலப் பொருட்களை வாங்கி மகிழும் நாள். கல்யாண கனவுகள் நனவாகும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
யோகமான நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நீண்ட நாளாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.
கடகம்
நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
சிம்மம்
உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வுடன் நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.
கன்னி
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். இடம், வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
துலாம்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
விருச்சிகம்
வெற்றிகள் குவியும் நாள். எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும். லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். மாற்றினத்தவர் மூலம் மகிழ்ச்சிக்குரிய செய்தி உண்டு.
தனுசு
உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
மகரம்
கவலைகள் தீரும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும்.
கும்பம்
நட்பு பகையாகும் நாள். நாணய பாதிப்பு ஏற்படும். எதிர்பார்த்ததைவிட கூடுதல் விரயம் உண்டு. நிதானத்துடன் செயல்படவும். தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.
மீனம்
சுபச்செலவுகள் ஏற்படும் நாள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.
- 25-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
- வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் 24-ந்தேதி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 25-ந்தேதி ரத சப்தமி விழா கோலாகலமாக நடக்கிறது. அதையொட்டி காலை, இரவு பல்வேறு வாகனச் சேவைகள் நடக்கின்றன.
அதன் விவரம் வருமாறு:-
25-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. அதையொட்டி அன்று காலை 6.45 மணியளவில் சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளும் உக்ர சீனிவாச மூர்த்திக்கு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா, இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
ரத சப்தமி விழாவையொட்டி 25-ந்தேதி கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ஆகிய ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம், வி.ஐ.பி. புரோட்டோக்கால் முக்கியஸ்தர்களை தவிர அனைத்து வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் 24-ந்தேதி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலும் ரத சப்தமியையொட்டி திருப்பதியில் 24 முதல் 26-ந்தேதி வரை இலவச தரிசன பக்தர்களுக்கான டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வைகுண்ட ஏகாதசிக்குப் பிறகு மொத்தம் 7 லட்சத்து 83 ஆயிரத்து 411 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
- இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமாக அதிகரித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் கடந்த 20-ந்தேதி முதல் நேற்று வரை நடந்தது. இன்று ஏகாந்த சேவைக்குப் பிறகு, வைகுண்ட வாசல் மூடப்பட்டது.
இதன் மூலம், கோவிலில் வழக்கமான தரிசன முறை மீண்டும் அமலுக்கு வந்தது. இன்று முதல் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் சேவைகளும் வழக்கம் போல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, வைகுண்ட துவார தரிசனத்தின் போது திருமலையில் சாதனை எண்ணிக்கையிலான பக்தர்கள் குவிந்தனர். தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, வைகுண்ட ஏகாதசிக்குப் பிறகு மொத்தம் 7 லட்சத்து 83 ஆயிரத்து 411 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமாக அதிகரித்துள்ளது. முதல் நாட்களில் கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களையும் தடுக்க அதிகாரிகள் ஒருங்கிணைந்தனர்.
வைகுண்ட துவார தரிசன நாட்களில் ரூ.40.43 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது.
முந்தைய ஆண்டுகளிலும், வைகுண்ட தரிசனத்தின் போது உண்டியல் வருமானம் சாதனை அளவில் பதிவானதாக தெரிவித்தனர்.
- திருவாரூரில் திருமஞ்சன வீதியும், காரைக்காட்டு தெருவும் சந்திக்கும் நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்
- மூன்று அல்லது ஒன்பது வாரங்கள், இதேபோல் வணங்கி வந்தால் திருமணத் தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திண்டுக்கல் நகரின் மத்திய பகுதியில் கோபாலசமுத்திரம் குளக்கரையில் 108 விநாயகர் கோவில் உள்ளது. எந்தவிதமான பிரச்சனையாக இருந்தாலும் இங்கு வந்து திருவுளச்சீட்டு போட்டுப்பார்த்து நன்மை பெறுகிறார்கள். சங்கடஹர சதுர்த்தியில் விநாயாகருக்கு தயிர் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். விநாயகரின் 32 வடிவங்களில் ஒன்று 'உச்சிஷ்ட கணபதி'. ஒரு பெண்ணை அணைத்தபடி உள்ள வடிவம்தான் 'உச்சிஷ்ட கணபதி' வடிவமாகும். இந்த உச்சிஷ்ட கணபதியை வணங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, தீவனூர் கிராமம். இங்குள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் ஆலயத்தில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அவ்வூர் மக்களின் நம்பிக்கை.
திருவாரூரில் திருமஞ்சன வீதியும், காரைக்காட்டு தெருவும் சந்திக்கும் நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார் 'பெருநாட்டு பிள்ளையார்.' இந்தக் கோவில், தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தான் திறந்திருக்கும். இந்த கோவிலின் சிறப்பே அரை மணிநேரத்திற்கு நடக்கும் அபிஷேகம் தான். அதைக் கண்டு தரிசித்தால் தொழில் அபிவிருத்தி, குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, திருமணம் கைகூடுவது என்று அனைத்து வேண்டுதல்களும் சில மாதங்களுக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில், கோரையாற்றின் கரையில் வீற்றிருக்கிறார் மதுரவிநாயகர். திருமணத்தடை உள்ளவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து, கோவிலின் எதிரேயுள்ள புனித ஊற்றுக் கிணற்றில் குளித்து, புத்தாடைகள் அணிந்து விநாயகரை வணங்க வேண்டும். சிவப்பு அரளி, அருகம்புல் மாலை போன்றவற்றால் விநாயகரை அலங்கரித்து, அவருக்குப் பிடித்த தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலிகட்ட வேண்டும். தொடர்ந்து மூன்று அல்லது ஒன்பது வாரங்கள், இதேபோல் வணங்கி வந்தால் திருமணத் தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
நெல்லை காந்திமதி அம்மன் ஆலயத்தில் அருள்புரியும் பொல்லாப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தினமும் அவரை மனதில் தியானம் செய்தால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்கிறார்கள். குழந்தை பிறந்ததும் கோவில் சன்னிதிக்கு வந்து, இங்குள்ள ஜன்னல் போல் உள்ள பகுதியில் குழந்தையை உட்புறமாகத் தந்து, வெளிப்புறமாக வாங்கிக்கொள்ளும் சம்பிரதாயம் இன்றும் நடைபெற்று வருகிறது.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
- திருவிடைமருதூர் ஸ்ரீ முருகன் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-25 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி காலை 11.23 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : உத்திரம் இரவு 6.06 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம் : சித்த/அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான கிளி வாகன சேவை
தேய்பிறை சஷ்டி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். இயற்பகை நாயனார் குருபூஜை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ முருகன் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பெருந்திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் திருக்கோவிலில் காலை அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் காலை சிறப்பு பால் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உற்சாகம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-ஆர்வம்
கடகம்-வெற்றி
சிம்மம்-ஆதரவு
கன்னி-பக்தி
துலாம்- நன்மை
விருச்சிகம்-சாந்தம்
தனுசு- பரிசு
மகரம்-உழைப்பு
கும்பம்-பெருமை
மீனம்-கடமை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
அலைச்சல் அதிகரிக்கும் நாள். முன்கோபத்தை தவிர்ப்பதன் மூலம் முன்னேற்றம் காணலாம். அரைகுறையாக நின்ற வேலைகளை முடிக்க முன்வருவீர்கள்.
மிதுனம்
உதிரி வருமானங்கள் பெருகும் நாள். உள்ளத்தில் அமைதி கூடும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தடைபட்ட கல்யாணம் முடிவாகும்.
கடகம்
மகிழ்ச்சி கூடும் நாள். உத்தியோக நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடும்.
சிம்மம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். நீங்கள் தேடிச்சென்று பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவரலாம். குடும்ப நலன் கருதி முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
கன்னி
உதவி செய்து உள்ளம் மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். அலைபேசி மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
துலாம்
கடன் சுமை குறையும் நாள். கடல் தாண்டிச் செல்லும் முயற்சி கைகூடும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து செயல்படுவர்.
விருச்சிகம்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரன்கள் திடீரென முடிவாகும். வாங்கல், கொடுக்கல்களில் லாபம் உண்டு. எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
தனுசு
கரைந்த சேமிப்புகளை ஈடு கட்டும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.
மகரம்
மனக்குழப்பம் அகலும் நாள். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்
நிம்மதி குறையும் நாள். நிச்சயித்த காரியம் ஒன்றில் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வீண்பழிக்கு ஆளாக நேரிடும். விரயங்கள் அதிகரிக்கும்.
மீனம்
நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். நினைத்தது நிறைவேற நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
- ஒரு நாளைக்கு சராசரியாக 75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துள்ளனர்.
- தங்கம், வெள்ளி நகைகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டு உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 30-ந் தேதி இரவு வைகுண்ட துவார வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
முதல் 3 நாட்களுக்கு முன்பதிவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் சாமானிய பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னுரிமை என்ற அடிப்படையில் திருப்பதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் 5 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்கப்பட்டது.
வைகுண்ட துவார தரிசனம் வழியாக தரிசனம் செய்வதற்காக இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.
வைகுண்ட துவார தரிசனம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதன் பிறகு கோவிலில் தினசரி வழிபாடு வழக்கம்போல் நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 9 நாட்களில் 7, 09,831 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
ஒரு நாளைக்கு சராசரியாக 75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துள்ளனர். ரூ.36.86 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். மேலும் தங்கம், வெள்ளி நகைகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டு உள்ளது.
திருப்பதியில் நேற்று 85, 752 பேர் தரிசனம் செய்தனர். 19,443 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.






