மீனம்- வார ராசிபலன் 26.04.2026 முதல் 02.05.2026 வரை

தொழில், உத்தியோகம் தொடர்பான இன்னல்கள் அகலும். பயணங்கள் அதிகரிக்கும்.
மீனம்- வார ராசிபலன் 26.04.2026 முதல் 02.05.2026 வரை
Published on

விபரீத ராஜயோகமான வாரம். அஷ்டமாதிபதி சுக்கிரன் மூன்றாம் இடத்தில் ஆட்சி பலன் பெறுவதால் வம்பு, வழக்கு அவமானங்கள், ஆரோக்கிய குறைாடு, எதிர்மறை சிந்தனைகள் விலகி சாதகமான சூழ்நிலை உண்டாகும். நேர்வழி, குறுக்குவழி என பல வழிகளில் பணம் பையை நிரப்பும். பணிகளை மேற்கொள்ளும் போது தடை தாமதங்கள் வந்தாலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள்.

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில், உத்தியோகம் தொடர்பான இன்னல்கள் அகலும். பயணங்கள் அதிகரிக்கும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும். நல்ல வரன் அமையும். 30.4.2026 அன்று பகல் 1.14 முதல் 3.5.2026 அன்று நள்ளிரவு 12.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் உடலில் கண், பாதங்களில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் உரிய மருத்துவரை அணுக வேண்டும். சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவியை வழிபட வேண்டும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com