மேஷம்- வார ராசிபலன் 26.04.2026 முதல் 02.05.2026 வரை

நல்ல புதிய தொழிலில் வாய்ப்புகள் தேடி வரும்.
மேஷம்- வார ராசிபலன் 26.04.2026 முதல் 02.05.2026 வரை
Published on

புதிய முயற்சிகள் வெற்றி தரும் வாரம். ராசி அதிபதி செவ்வாயின் நான்காம் பார்வை முயற்சி ஸ்தானத்தில் உள்ள குருவின் மேல் பதிகிறது. இது குரு மங்கள யோக அமைப்பாகும். தாய், தந்தை வழி உறவுகளின் ஆதரவும் சொத்தும் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவோடு சில பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். பொன் பொருள் சேரும். பூமி யோகம் உண்டு.

நல்ல புதிய தொழிலில் வாய்ப்புகள் தேடி வரும். வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு நம்பிக்கையை அதிகரிக்கும். சிலருக்கு வேலையில் மாற்றம் செய்ய நேரும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும்.

குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் திருப்தி தரும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். சிலர் ஆரோக்கிய குறைபாடு அகலும். குருப்பெயர்ச்சிக்குப் முன்பு திருமண முயற்சி செய்வது நல்லது. தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் நிலையான முன்னேற்றம் உண்டாகும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com