Today Rasipalan | இன்றைய ராசிபலன் 28.6.2026: இந்த ராசிக்காரர்களுக்கு பொதுவாழ்வில் புகழ் கூடும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் சில பணிகளை விட்டுவிடும் சூழ்நிலை உருவாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது.

ரிஷபம்

கல்யாண முயற்சி கைகூடும் நாள். உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

மிதுனம்

அலைச்சல் கூடும் நாள். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் பணம் கேட்டுத் தொல்லை தரலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

கடகம்

விரயங்கள் கூடும் நாள். கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனை பலன் தரும்.

சிம்மம்

இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்கள் உதவி கிடைக்கும்.

கன்னி

அதிகாலையிலேயே நல்ல தகவல் வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உங்களுக்குப் பிடித்தமான இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.

துலாம்

நிதி நிலை உயரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.

விருச்சிகம்

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே இருக்கும்.

தனுசு

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புனித யாத்திரைகள் செல்வதில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.

மகரம்

தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. கொடுத்த பாக்கிகள் வசூலாகும்.

கும்பம்

குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உடன்பிறப்புகள் வழியே விரயம் உண்டு.

மீனம்

பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை விலகும் நாள். தொலைதூரப் பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com