Today Rasipalan | இன்றைய ராசிபலன் 12.7.2026: இவர்களுக்கு யோகமான நாள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.
rasipalan
Published on

மேஷம்

யோகமான நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் அதிகரிக்கும்.

ரிஷபம்

பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். செவி குளிரும் செய்திகள் வந்து சேரும். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும்.

மிதுனம்

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். திருமண பேச்சுகள் முடிவிற்கு வரும்.

கடகம்

உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.

சிம்மம்

வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்துகொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

கன்னி

நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்

அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

தனுசு

நினைத்தது நிறைவேறும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

மகரம்

வருமானம் உயரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர். தொழில் வெற்றிநடை போடும்.

கும்பம்

இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

மீனம்

வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். சுப விரயம் ஏற்படும். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com