வெப் ஸ்டோரீஸ்
சுவையாக சமைக்க எளிமையான சமையல் குறிப்புகள்
வெங்காய சட்னி, தக்காளி சட்னி செய்யும் போது சிறிது எள்ளுப்பொடி போட்டால் சட்னி ருசியாக இருக்கும்.
மெதுவடைக்கு மாவு அரைக்கும்போது உளுந்து மாவுடன் அரிசி மாவு கலந்து செய்தால் வடை சுவையாக இருக்கும்.
ரவையை முதலில் நெய் விட்டு வறுத்து, காய்ச்சிய பால் ஊற்றி கேசரி செய்தால் ருசியாக இருக்கும்.
இஞ்சி, பூண்டு விழுது அரைக்கும் போது, சிறிது உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்தால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
தேங்காய் துவையல் தயார் செய்யும்போது, சிறிது கசகசா சேர்த்து அரைத்தால், சுவை கூடும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு கலந்து சமையலறையில் தெளித்தால் ஈ, எறும்பு அண்டாது.
உருளைக் கிழங்கு வறுவல் செய்யும்போது இட்லிப்பொடி சிறிது கலந்து சமைத்தால் ருசியாக இருக்கும்.
தேவையான அளவு கடலை மாவு, அரிசி மாவு, பொடித்த வறுத்த வேர்க்கடலை மூன்றையும் சேர்த்து வெங்காய பக்கோடா செய்தால் சுவையாக இருக்கும்.

