TN Assembly Election | தேனி வீரபாண்டி தொகுதியில் வெற்றி வாகை சூடப்போவது யார்? Vox Pop

தேனி வீரபாண்டி தொகுதியில் மாலைமலர் தரப்பில் vox pops நடத்தப்பட்டது.
TN Assembly Election | தேனி வீரபாண்டி தொகுதியில் வெற்றி வாகை சூடப்போவது யார்? Vox Pop
Published on

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலை ஒட்டி தேனி வீரபாண்டி தொகுதியில் மாலைமலர் தரப்பில் vox pops நடத்தப்பட்டது.

நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்? என்று சுமார் 43 பேரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதில், தி.மு.க.-விற்கு 11 பேர் வாக்களிப்பதாகவும், அ.தி.மு.க-விற்கு 15 பேர் வாக்களிப்பதாகவும், த.வெ.க.-விற்கு 13 பேர் வாக்களிப்பதாகவும், நாம் தமிழர் கட்சிக்கு 3 பேர் வாக்களிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சுயேச்சைக்கு வாக்களிப்பதாக ஒருவர் கூறினார்.

இது மக்களின் மனநிலையை அறிய எடுக்கப்பட்ட ஒரு vox pops மட்டுமே. மே 4ம் தேதி அன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் முடிவு தெரியவரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com