

சென்னையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் காரணம் என்ன என்று மாலை மலர் சார்பில் vox pop நடத்தப்பட்டது.
இதில், பொது மக்கள் பலர், நாளுக்கு நாள் அதிகரித்த வரும் போக்குவரத்து நெரிசல் குறித்து தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.
குறிப்பாக, சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணிகளாக சாலை ஆக்கிரமிப்பு, வாகன எண்ணிக்கை அதிகம், சிக்னல் பிரச்சனை உள்ளிட்டவை இருப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Vox pop-ல் 15 பேரிடம் கேட்ட கேள்விக்கு 12 பேர் வாகன எண்ணிக்கை தான் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, நடைபாதை வியாபாரிகள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால், சாலைகள் குறுகளாக மாறுகின்றன. இதனால், போக்குவரத்து ஸ்தம்பிப்பதாக 3 பேர் தெரிவித்துள்ளனர்.
மேலும், போக்குவரத்து நெரிசலுக்கு சிக்னல் பிரச்சனையே காரணம் என்றும், வெளிநாடுகளில் இருப்பதுபோல் சிக்னலே இல்லாமல் வாகனங்கள் செல்வதுபோன்ற சூழல் ஏற்பட வேண்டும் என்றும் 2 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.