

தமிழகத்தில் மழைக்காலம் என்றாலே மக்களுக்கு கொஞ்சம் பயம்தான். கனமழை பெய்தால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடும், சாலையில் செல்ல முடியாது, மின்சாரம் இருக்காது என்று பல கவலைகள் வரும்.இந்த கவலைகளை போக்க அரசு ஒவ்வொரு ஆண்டும் மழைக்கு முன்பே பல ஏற்பாடுகளை செய்கிறது.
வடிகால்களை சுத்தம் செய்வது, மழைநீர் தேங்காமல் பார்ப்பது, பாதுகாப்பு முகாம்கள் அமைப்பது, உணவு மற்றும் மருந்து தயாராக வைப்பது போன்றவை அதில் அடங்கும்.
ஆனால், அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே போதுமானதாகவும், திருப்தியாகவும் இருக்கிறதா? இல்லை, இன்னும் செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறதா? என்பதைப் பற்றி மாலை மலர் சார்பில் பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதில், தமிழக அரசின் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்தியாக இருப்பதாக 75 சதவீதம் பேரும், திருப்தி இல்லை என 25 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
யூடியூப்- திருப்தி என 65 சதவீதம் பேர், திருப்தியில்லை என 29 சதவீதம் பேரும்,கருத்து இல்லை என 6 பேரும் தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம்: திருப்தி என73 சதவீதம் பேரும், திருப்தி இல்லை என 16 சதவீம் பேரும், கருத்தில்லை என 11 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
டுவிட்டர்: திருப்தி என 67 சதவீதம் பேரும், திருப்தியில்லை என 17 சதவீதம் பேரும், கருத்து இல்லை என 16 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்தள்ளனர்.