சமூக வலைதள தாக்கத்தால் ஆட்சி மாறுமா? Social Media-வின் அரசியல் தாக்கம் குறித்து சென்னை மக்கள் கருத்து

ஒருதலைப்பட்சமான பிரசாரங்கள் வாக்காளர்களின் முடிவுகளை பாதிக்கக்கூடும் என்ற கவலையும் நிலவுகிறது.
vox pop screenshot
Published on: 

அரசியலில் சமூக வலைதளங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள், தலைவர்களின் பேச்சுகள், அரசின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் விமர்சனங்கள் என அனைத்தும் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறுகின்றன.

இதனால், சமூக வலைத்தளங்கள் உண்மையிலேயே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரும் அரசியல் குறித்த தங்களது கருத்துகளை எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டா மற்றும் யூடியூப் என தங்களுக்கு பிடித்த சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சென்றடைய டிஜிட்டல் பிரசாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அதே நேரத்தில், போலி செய்திகள், தவறான தகவல்கள் மற்றும் ஒருதலைப்பட்சமான பிரசாரங்கள் வாக்காளர்களின் முடிவுகளை பாதிக்கக்கூடும் என்ற கவலையும் நிலவுகிறது.

தாக்கத்தை ஏற்படுத்துமா?

இந்த சூழலில், சமூக வலைதளங்கள் மக்களின் அரசியல் சிந்தனையை மாற்றுகின்றனவா? இணையத்தில் வைரலாகும் கருத்துகள் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா? அல்லது மக்களின் நேரடி அனுபவங்களும் அரசின் செயல்பாடுகளுமே ஆட்சியைத் தீர்மானிக்குமா?

இதுகுறித்து மாலைமலர் சார்பில் சென்னை மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. சமூக வலைதளங்களின் அரசியல் தாக்கம், இளைஞர்களின் வாக்கு மனநிலை மற்றும் ஆட்சி மாற்றத்தில் டிஜிட்டல் பிரசாரங்களின் பங்கு குறித்து மக்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள் கவனத்தை ஈர்க்கின்றன. சமூக வலைதளங்களின் சக்தி ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்குமா? மக்களின் தீர்ப்பே இதற்கான இறுதி விடை.

X

Maalai Malar
www.maalaimalar.com