

எப்போதும் பரபரப்பாகவும், வாகன நெரிசலுடனும் காணப்படும் சென்னை, சில நேரங்களில் கூட்டமே இல்லாமல் அமைதியாக இருந்தால் எப்படி இருக்கும்?
சாலைகளில் ஹாரன் சத்தம் இல்லை, சிக்னல்களில் நீண்ட காத்திருப்பு இல்லை, பிடித்த இடங்களுக்கு செல்ல டிராஃபிக் டென்ஷனும் இல்லை! நினைத்து பார்க்கவே ஜாலியாக இருக்கிறதா? ஆனால், அதே சென்னை திடீரென அமைதியாகிவிட்டால் ஒரு வெறுமை தோன்றத்தான் செய்யும்.
வழக்கமான டீக்கடை அரட்டை, நண்பர்களின் சந்திப்பு, இரவு நேர பீச் விசிட் என சென்னையின் கலகலப்பே தனி அழகு. கூட்டம் இல்லாத சென்னை நிம்மதியா? அல்லது நம்மை போர் அடிக்க வைக்குமா? என சென்னை மக்களிடம் மாலைமலர் சார்பில் கருத்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்தவர்களில் இனிமையாக இருப்பதாக 87 சதவீதம் பேரும், 13 சதவீதம் பேர் போர் அடிப்பதாகவும், 1 சதவீதத்தினர் போரடிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதே கேள்வி மாலைமலர் யூடியூப் தளத்திலும் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்தவர்களில் 58 சதவீதம் பேர் போர் அடிப்பதாகவும், 6 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்தனர்.
மாலைமலர் இன்ஸ்டாகிராம் பக்கதில் இதே கேள்விக்கு பதிலளித்தவர்களில் 100 சதவீதம் பேரும் இனிமையாக இருப்பதாகவும், எக்ஸ் தளத்தில் இதே கேள்விக்கு பதிலளித்தவர்களில் 67 சதவீதம் பேர் இனிமையாக இருப்பதாகவும், 33 சதவீதம் பேர் போர் அடிப்பதாகவும் தெரிவித்தனர்.