குடும்ப பட்ஜெட்டை சமாளிக்க முடிகிறதா? கொந்தளித்த சென்னை எழும்பூர் பகுதி மக்கள்

சிலர் தங்களின் தேவைகளை குறைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
குடும்ப பட்ஜெட்டை சமாளிக்க முடிகிறதா?  கொந்தளித்த சென்னை எழும்பூர் பகுதி மக்கள்
Published on: 

இன்றைய காலகட்டத்தில் குடும்ப பட்ஜெட்டைச் சமாளிப்பது மக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வீட்டு வாடகை, மின்சார கட்டணம், கல்வி செலவு மற்றும் மருத்துவ செலவுகள் குடும்பத்தின் பொருளாதாரத்தை பாதிக்கின்றன.

குறிப்பாக, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மாத இறுதியில் பண பற்றாக்குறையை சந்திக்கின்றன. குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பதும் கடினமாகிறது. சிலர் தங்களின் தேவைகளை குறைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மக்கள் கருத்து:

அந்த வகையில், சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள பொது மக்களிடம் குடும்ப பட்ஜெட்டை சமாளிக்க முடிகிறதா என மாலைமலர் சார்பில் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்தவர்களில் 74 சதவீதம் பேர் பட்ஜெட்டை சமாளிக்க முடியவில்லை என்றும் 26 சதவீதம் பேர் மட்டும் பட்ஜெட்டை சமாளிக்க முடிவதாக தெரிவித்தனர்.

இதேபோல் மாலைமலர் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கும் 74 சதவீதம் பேர் பட்ஜெட்டை சமாளிக்க முடியவில்லை என்று பதிலளித்தனர். 20 சதவீதம் பேர் மட்டும் பட்ஜெட்டை சமாளிக்க முடிவதாகவும், 6 சதவீதம் பேர் இதற்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் பதிலளித்தனர்.

மாலைமலர் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் இந்த கேள்விக்கு பதிலளித்தவர்களில் 67 சதவீதம் பேர் பட்ஜெட்டை சமாளிக்க முடியவில்லை என்றும், 20 சதவீதம் பேர் பட்ஜெட்டை சமாளிக்க முடிவதாகவும், 13 சதவீதம் பேர் இதற்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர். இத்துடன் எக்ஸ் தளத்தில் பதிலளித்தவர்களில் 33 சதவீதம் பேர் பட்ஜெட்டை சமாளிக்க முடியவில்லை என்றும் 67 சதவீதம் பேர் மட்டும் பட்ஜெட்டை சமாளிக்க முடிவதாகவும் தெரிவித்தனர்.

X