

ஒரு நாள் முழுமையாகப் பேசாமல் இருப்பது என்பது பெரும்பாலானோருக்கு நடைமுறைக்கு மாறான மற்றும் கடினமான ஒன்றாகவே தெரிகிறது.
மனித வாழ்க்கை என்பது தொடர்ச்சியான பேச்சுரிமையோடும் தொடர்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளது. காலையில் விழிப்பது முதல் இரவு உறங்கச் செல்வது வரை எத்தனையோ பேருடன் பேச வேண்டிய கட்டாயம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது. நண்பர்களின் அழைப்புகள், அலுவலகப் பணிகள், வியாபாரத் தேவைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஏற்படும் உரையாடல்கள் என அனைத்துமே பேச்சின் மூலமாகவே சாத்தியமாகின்றன. இதனால் ஒரு நாள் முழுமையாகப் பேசாமல் இருப்பது என்பது பெரும்பாலானோருக்கு நடைமுறைக்கு மாறான மற்றும் கடினமான ஒன்றாகவே தெரிகிறது.மௌன விரதம்
சிலர் சவால்களுக்காகவோ அல்லது குறிப்பிட்ட காரணங்களுக்காகவோ மவுனமாக இருக்க முயன்றாலும், அது மன உளைச்சலையும் டென்ஷனையும் ஏற்படுத்தக்கூடும். வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளைப் போல, ஒரு நாள் முழுக்கப் பேசாமல் இருப்பது என்பது சிரமமான காரியம் என்றும், பேசாமல் இருந்தால் தலைவலிதான் மிஞ்சும் என்றும் மக்கள் நகைச்சுவையுடன் குறிப்பிடுகின்றனர். எத்தகைய சூழலிலும் மனிதர்கள் தங்களது உணர்வுகளையும் தேவைகளையும் வெளிப்படுத்தப் பேச்சே அடிப்படையாக அமைகிறது.
ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருக்க முடியுமா? என்பது குறித்து மாலை மலர் சார்பில் vox pop நடத்தப்பட்டது, இதுகுறித்தான மக்களின் கருத்துகள் என்னவென்பதை கீழே உள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.