Influencer-களை நம்பி ஏமாறுகிறோமா? நகைக்கடை கொள்ளை குறித்து பொது மக்கள் கருத்து

ஆடம்பர வாழ்க்கை என வெளியில் தெரியும் பிம்பத்தை மட்டுமே வைத்து ஒருவரை நம்பலாமா?
Influencer-களை நம்பி ஏமாறுகிறோமா? நகைக்கடை கொள்ளை குறித்து பொது மக்கள் கருத்து
Published on: 

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் Influencer-களின் வாழ்க்கை முறையையும், அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களையும் பார்த்து பலரும் கண்மூடித்தனமாக நம்புகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கைக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன?

சமீபத்தில் நகைக்கடை கொள்ளை தொடர்பாக இன்ஸ்டாகிராம் பிரபலங்களின் பெயர்கள் அடிபடுவது பல கேள்விகளை எழுப்புகிறது. லைக்குகள், ஃபாலோயர்கள், ஆடம்பர வாழ்க்கை என வெளியில் தெரியும் பிம்பத்தை மட்டுமே வைத்து ஒருவரை நம்பலாமா?

மக்கள் கருத்து:

இதுபற்றி மாலைமலர் சார்பில் சென்னையில் பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. Influencer-களை நம்பலாமா? என கேட்டதற்கு 60 சதவீதம் பேர் நம்ப முடியவில்லை என்றும் 33 சதவீதம் பேர் நம்பலாம் என்றும் 7 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் பதிலளித்தனர்.

இதே கேள்விக்கு மாலைமலர் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிலளித்தவர்களில் 18 சதவீதம் பேர் நம்பலாம் என்றும் 77 சதவீதம் பேர் நம்ப முடியவில்லை என்று்ம 5 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்தனர்.

மாலைமலர் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்டதற்கு 12 சதவீதம் பேர் நம்பலாம் என்றும் 78 சதவீதம் பேர் நம்ப முடியவில்லை என்றும் 10 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் பதிலளித்தனர். எக்ஸ் தள பக்கத்தில் 100 சதவீதம் பேர் நம்பலாம் என்று தெரிவித்தனர்.

X