'Influencer' ஆவதுதான் இன்றைய இளைஞர்களின் ஆசையா? - சென்னை மக்கள் என்ன சொல்கிறார்கள்?

இன்ஸ்டாகிராமில் வீடியோ போடுவதாகவும், ஆனால் வீட்டில் 10 டேக் எடுத்து ரீல்ஸ் போடுவதற்கும், சினிமாவில் நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Social Media Influencer
Published on: 
Summary

இன்றைய தலைமுறை இளைஞர்களின் மிகப்பெரிய ஆசையே சமூக வலைதளங்களில் 'இன்ஃப்ளூயன்சர்' ஆவதுதான் என்ற கருத்து பரவலாக உள்ளது. இதுகுறித்து சென்னை பொதுமக்களிடம் மாலைமலர் சார்பில் கருத்து கேட்கப்பட்டது.

பலரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் விளம்பரத்திற்காக அதிக நேரம் செலவிடுவதாகவும், உண்மையான உழைப்பை விட எளிதில் பிரபலமாகவும் பணம் சம்பாதிக்கவும் விரும்புவதாகவும் மூத்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சினிமாவில் நுழைய வேண்டும் என்ற ஆசையில் பல இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் வீடியோ போடுவதாகவும், ஆனால் வீட்டில் 10 டேக் எடுத்து ரீல்ஸ் போடுவதற்கும், சினிமாவில் நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதே சமயம், எல்லோரும் இன்ஃப்ளூயன்சர் ஆக வேண்டும் என்று நினைப்பதில்லை என்றும், அவரவர் விருப்பம் மற்றும் திறமைக்கு ஏற்பப் பலர் தங்களது வேலை மற்றும் படிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் இளைஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாலைமலர் சார்பில் vox pop நடத்தப்பட்டது. சென்னைவாசிகள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கீழே உள்ள வீடியோவில் விரிவாகப் பார்ப்போம்....

X