இனி பணி உயர்வுக்கு AI அறிவு கட்டாயம் - ஊழியர்களுக்கு Strict கண்டிஷன் போட்ட Accenture சி.இ.ஓ

இனி பணி உயர்வுக்கு AI அறிவு கட்டாயம் - ஊழியர்களுக்கு Strict கண்டிஷன் போட்ட Accenture சி.இ.ஓ
Published on: 
Summary

கணினியை பயன்படுத்த சொன்னபோது அதை யாரும் கட்டாயப்படுத்துவதாக கருதவில்லை.

பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு வருகையால் அதிகளவில் ஆட்குறைப்பை செய்து வருகின்றன.

தற்போது வேலையிழப்பு என்பதை தாண்டி வேலையில் உயர்ந்த நிலைக்கு செல்லவும் ஏஐ அறிவு அடிப்படை தகுதியாக மாறி வருகிறது.

அந்த அக்சென்சர் (Accenture) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஜூலி ஸ்வீட் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, நிறுவனத்தில் ஊழியர்கள் பதவி உயர்வு பெற ஏஐ குறித்த அறிவு அவசியம் என்று அவர் கண்டிஷன் போட்டுள்ளார்.

இது திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல, கடந்த மூன்று ஆண்டுகளாக ஊழியர்களை இந்தத் தொழில்நுட்பத்திற்கு பழக்கப்படுத்திய பிறகே பதவி உயர்வுக்கு ஏஐ அவசியம் என்ற நிலைப்பாட்டை எடுத்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூலி ஸ்வீட் இதுகுறித்து கூறுகையில், "பல ஆண்டுகளுக்கு முன்பு அலுவலகங்களில் கணினியை பயன்படுத்த சொன்னபோது அதை யாரும் கட்டாயப்படுத்துவதாக கருதவில்லை.

அது வேலை செய்வதற்கான வழியாகப் பார்க்கப்பட்டது. அதேபோல் இன்று அக்சென்சரில் ஏஐ என்பது வேலை செய்வதற்கான வழியாகிவிட்டது." என்று குறிப்பிட்டார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com