பிப்ரவரி 28 ஆம் தேதி இந்தியா வரும் ரெட்மி ஸ்மார்ட்போன்

ரெட்மி பிராண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேகி அறிமுகமாகிறது. #RedmiNote7 #Smartphone
பிப்ரவரி 28 ஆம் தேதி இந்தியா வரும் ரெட்மி ஸ்மார்ட்போன்
Published on

சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

முன்னதாக ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றிய டீசர்களை அந்நிறுவன இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்கான நுழைவு சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமியின் முதல் 48 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 7 இருக்கும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனுடன் ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரெட்மி கோ மாடல்களும் அறிமுகமாகும் என தெரிகிறது. 

ரெட்மி நோட் 7 சிறப்பம்சங்கள்

- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வலைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்

- அட்ரினோ 512 GPU

- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி

- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10

- ஹைப்ரிட் டூயல் சிம்

- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF, EIS

- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

- 13 எம்.பி. செல்ஃபி கேமரா

- கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

- க்விக் சார்ஜ் 4

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் பர்ப்பிள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் இதன் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,390) முதல் துவங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com