மூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் சியோமி ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமியின் Mi ஏ3 ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சியோமி Mi ஏ3
சியோமி Mi ஏ3
Published on

சியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போன் சிசி9இ என்ற பெயரில் சீனாவில் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஸ்மார்ட்போனில் 6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபிக்களை எடுக்க 32 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து 1.6μm பிக்சல்களில் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தரமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போனில் 3D வளைந்த பின்புறம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுடன் 10வாட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.

சியோமி Mi ஏ3 சிறப்பம்சங்கள்:

- 6.08 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்

- அட்ரினோ 610 GPU

- 4 ஜி.பி. LPDDR4 ரேம்

- 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

- ஆண்ட்ராய்டு 9.0 பை

- 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 0.8μm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், EIS

- 8 எம்.பி. 118° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.2

- 2 எம்.பி. டெப்த் கேமரா, 1.75μm பிக்சல், f/2.4

- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், இன்ஃப்ராரெட் சென்சார்

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

- யு.எஸ்.பி. டைப்-சி

- 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி

- 18 வாட் க்விக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் கைன்ட் ஆஃப் கிரே, நாட் ஜஸ்ட் புளு மற்றும் மோர் தான் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 249 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 19,225) என்றும் 128 ஜி.பி. மாடல் 279 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 21,540) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com