இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல் விலை இந்திய சந்தையில் நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
சியோமி Mi ஏ3
சியோமி Mi ஏ3
Published on

சியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் Mi ஏ3 ஸ்மார்ட்போன் இதுவரை ரூ. 12,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஸ்மார்ட்போனின் விலையில் ரூ. 1000 நிரந்தரமாக குறைக்கப்படுவதாக சியோமி அறிவித்துள்ளது. அந்த வகையில் சியோமி Mi ஏ3 (4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) ரூ. 11,999 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போனில் 6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர், அதிகபட்சமாக 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் Mi ஏ3 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என சியோமி அறிவித்திருந்தது. இந்நிலையில், இதற்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட் அடுத்த மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Mi ஏ3 ஸ்மார்ட்போனில் ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. 

இத்துடன் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் செல்ஃபி கேமரா நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து 1.6μm பிக்சல்களை வழங்குகிறது.

3டி வளைந்த கிளாஸ் பேக் கொண்டிருக்கும் Mi ஏ3 மாடலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்படுகிறது. Mi ஏ3 ஸ்மார்ட்போனில் 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com