ட்விட்டர் ஐஒஎஸ் செயலியில் புது அம்சம் அறிமுகம்

ட்விட்டர் நிறுவனம் தனது ஐஒஎஸ் செயலியில் புதிய அம்சத்தினை வழங்க துவங்கி உள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ட்விட்டர்
ட்விட்டர்
Published on

ட்விட்டர் ஐஒஎஸ் செயலியை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் புதிய அம்சத்தை வெளியிட துவங்கி உள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வாய்ஸ் ட்விட் பதிவிட முடியும்.

பயனர்கள் ட்விட்டரில் பதிவிட விரும்பும் கருத்துக்களை அதிகபட்சமாக இரண்டு நிமிடங்களுக்குள் பேசி அவற்றை ஆடியோ வடிவில் பதிவிட முடியும். பின் ட்விட்டரில் அவர்களது ஃபாளோவர்கள் வாய்ஸ் ட்விட்களை கேட்கலாம்.

வாய்ஸ் ட்விட் உருவாக்க ட்விட் கம்போசர் ஆப்ஷனை க்ளிக் செய்து கேமரா ஐகானுக்கு முந்தைய வேவ்லெந்த் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். பின் பயனர்கள் தங்களது ப்ரோபைல் புகைப்படத்துடன் ரெக்கார்ட் செய்யக் கோரும் பட்டனை பார்க்க முடியும். இதில் பயனர்கள் தங்களது வாய்ஸ் ட்விட் உருவாக்கிக் கொள்ளலாம்.

ஒவ்வொரு வாய்ஸ் ட்விட் அளவு அதிகபட்சம் 140 நொடிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயனர் நீண்ட நேரத்திற்கு வாய்ஸ் ட்விட் செய்ய விரும்பினால், ட்விட்டர் தானாக புதிய வாய்ஸ் ட்விட் ஒன்றை உருவாக்கி அதனை திரெட் ஆக மாற்றி அடுத்த ட்விட்டாக பதிவிடும்.

வாய்ஸ் ட்விட்களை அனைத்து பயனர்களும் பார்க்க முடியும். ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் வாய்ஸ் ட்விட் தனி விண்டோவில் திறக்கிறது. இந்த விண்டோ செயலியின் கீழ் காணப்படுகிறது. வாய்ஸ் ட்விட் கேட்டுக் கொண்டே பயனர்கள் மற்ற ட்விட்களை ஸ்கிரால் செய்யலாம்.

முதற்கட்டமாக வாய்ஸ் ட்விட் பதிவிடும் அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com