விரும்பிய டிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலி அறிமுகம்

வாடிக்கையாளர்கள் அவரவர் விரும்பிய டிவி சேனல்களை தேர்வு செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிராய்
டிராய்
Published on

வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் டிவி சேனல்களை மட்டும் தேர்வு செய்து அதற்கான கட்டணம் செலுத்தும் வசதியை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது. 

ஆனால், இந்த திட்டம் திருப்திகரமாக அமையவில்லை. இதையடுத்து, வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய டிவி சேனல்களை தேர்ந்தெடுக்க புதிய செயலி ஒன்றை டிராய் தொடங்கி இருக்கிறது.

டிடிஹெச் சேவை நிறுவனங்கள், எம்எஸ்ஓக்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த செயலி இயங்குகிறது. இதில், டிடிஹெச் நிறுவனங்கள் வழங்கும் ஒவ்வொரு சேனலின் கட்டணமும், சேனல் தொகுப்புகளின் கட்டணமும் இடம்பெற்று இருக்கும். 

வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்வதுடன், தேவையற்ற சேனல்களை நீக்கி விடலாம். சந்தா விவரங்களையும் இந்த செயலியில் சரிபார்த்துக் கொள்ளலாம். என டிராய் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com