'டிராய் கட்டாயமாக்கிய தொகுப்பு' பகுதியை உருவாக்க வேண்டும்: டெலிகாம் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு!

பொருத்தமான வவுச்சர்களைக் கண்டறிந்து சந்தா செலுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
TRAI Logo and Phone Use
Published on: 

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( டிராய் ), அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் தங்களின் இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளில் “டிராய்-அனுமதித்த பேக்குகள் ” என்ற தலைப்பில் ஒரு தனி மற்றும் தெளிவாக தெரியும் பகுதியை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் அத்தகைய ரீசார்ஜ் வவுச்சர்களை எளிதாக கண்டறிந்து அணுக முடியும்.

போதுமான வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் தொலைத்தொடர்பு தளங்களில் டிராய் கட்டாயமாக்கிய வவுச்சர்களை கண்டறிவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து நுகர்வோரிடமிருந்து வந்த புகார்களை தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டிராய் ஆய்வு:

சேவை வழங்குநர்களின் வலைத்தளங்கள் மற்றும் செயலிகளை ஆய்வு செய்ததில், அத்தகைய வவுச்சர்கள் பெரும்பாலும் முக்கியமாக காட்டப்படவில்லை, வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வைக்கப்பட்டிருந்தன அல்லது பயனர்கள் பல திரைகளுக்கு செல்ல வேண்டியிருந்தது என டிராய் கூறியது.

மேலும், பல்வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளை ஆணையம் ஆய்வு செய்தது. அதில், டிராய் பரிந்துரைத்த வவுச்சர்கள் முக்கியமாகக் காட்டப்படவில்லை அல்லது எளிதில் அணுகக்கூடியதாக இல்லை என்பதையும், சில சமயங்களில் இந்த வவுச்சர்கள் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளன அல்லது நுகர்வோர் அவற்றைக் கண்டறிய பல பக்கங்கள் அல்லது திரைகள் வழியாகச் செல்ல வேண்டியுள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளது. இதன் விளைவாக, நுகர்வோர் தங்களின் தேவைகளுக்கு பொருத்தமான வவுச்சர்களைக் கண்டறிந்து சந்தா செலுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்;” என்று டிராய் கூறியது.

அதிரடி உத்தரவு:

புதிய வழிகாட்டுதலின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளில் உள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிரிவில், “TRAI-ஆல் கட்டாயமாக்கப்பட்ட பேக்குகள்” (TRAI-Mandated Packs) என்ற பகுதி முதல் டேபாக இடம்பெற வேண்டும். இந்தப் பகுதியில், TRAI-ஆல் கட்டாயமாக்கப்பட்ட பல்வேறு வகையான வவுச்சர்கள் இடம்பெற வேண்டும். மேலும், இது நிறுவனங்களின் பிரத்யேக விற்பனை நிலையங்களிலும் முக்கியமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

"பல்வேறு வகையான TRAI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட வவுச்சர்களைக் கொண்ட 'TRAI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்புகள்' என்ற தலைப்பில், தனியாகவும் தெளிவாகவும் தெரியும் ஒரு பிரிவு அல்லது தாவலை வழங்க வேண்டும்.

இது சேவை வழங்குநர்களின் இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளில் உள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிரிவில் முதல் தகவலாக தெரிய வேண்டும். மேலும், அவர்களின் மற்ற பிரத்யேக விற்பனை நிலையங்களிலும் இது முக்கியமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும்," என்று TRAI-இன் உத்தரவு தெரிவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com