

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்த கேலக்ஸி S25 ஸ்மார்ட்போன் இந்திய விலை உயர்த்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போது ரூ. 12,000 வரை உயர்ந்துள்ளது. மாற்றப்பட்ட புதிய விலை சாம்சங் இந்தியா வலைதளத்திலும் பிரதிபலிக்கிறது.
ஃபிளாக்ஷிப் தர ஸ்மார்ட்போனான கேலக்ஸி S25 மாடலில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஃபார் கேலக்ஸி பிராசஸர் உடன் வருகிறது. இத்துடன் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
சாம்சங் இந்தியா வலைதளத்தின் படி கேலக்ஸி S25 மாடலின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 84,999 என மாறியுள்ளது. இது முந்தைய விலையை விட ரூ. 4,000 அதிகம் ஆகும்.
இதேபோல் 12ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 1,04,999 என மாறியிருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 12,000 அதிகம் ஆகும்.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 80,000 மற்றும் ரூ. 92,999 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை மட்டும் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் விலை ரூ. 74,999 என்றே தொடர்கிறது.
அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி S25 மாடலில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஃபார் கேலக்ஸி பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 12MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 4000mAh பேட்டரி, 25 வாட் சார்ஜிங் சப்போர்ட், IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டம்ட் வசதியுடன் வருகிறது.